ADDED : ஜூலை 15, 2011 09:56 PM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே உச்சி மாகாளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த முருகபாண்டியன் மகள் நந்தினி (13).
தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். வீட்டில் மண்ணெணய் ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்த போது, தீ பற்றி படுகாயமடைந்தார். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இறந்தார். அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


