/உள்ளூர் செய்திகள்/கடலூர்/அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் பள்ளிகளுக்கு மானியம்அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் பள்ளிகளுக்கு மானியம்
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் பள்ளிகளுக்கு மானியம்
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் பள்ளிகளுக்கு மானியம்
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் பள்ளிகளுக்கு மானியம்
ADDED : ஜூலை 24, 2011 10:45 PM
திட்டக்குடி : நல்லூர் வட்டார வள மையம் சார்பில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் அரசு பள்ளிகளுக்கு மானியத்தொகை வழங்கப்பட்டது.நல்லூர் வட்டார வள மையம் சார்பில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் மற்றும் ஆதிதிராவிட நலப்பள்ளிகளுக்கு மானியத்தொகையாக 9 லட்சத்து 11 ஆயிரம் ரூபாயும், பள்ளி பராமரிப்பு மானியமாக 8 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் சிவகாமசுந்தரி மானியத் தொகையை பள்ளித்தலைமை ஆசிரியர்களிடம் வழங்கினார்.
உதவி தொடக்கக் கல்வி அலுவலர் புகழேந்தி உட்பட பலர் உடன் இருந்தனர்.


