/உள்ளூர் செய்திகள்/திருச்சி/கட்டி முடித்தும் மூடிகிடக்கும் ரேஷன் கடை உடனே திறக்க கிராம மக்கள் கோரிக்கைகட்டி முடித்தும் மூடிகிடக்கும் ரேஷன் கடை உடனே திறக்க கிராம மக்கள் கோரிக்கை
கட்டி முடித்தும் மூடிகிடக்கும் ரேஷன் கடை உடனே திறக்க கிராம மக்கள் கோரிக்கை
கட்டி முடித்தும் மூடிகிடக்கும் ரேஷன் கடை உடனே திறக்க கிராம மக்கள் கோரிக்கை
கட்டி முடித்தும் மூடிகிடக்கும் ரேஷன் கடை உடனே திறக்க கிராம மக்கள் கோரிக்கை
ADDED : ஜூலை 26, 2011 12:28 AM
திருச்சி: கட்டி முடித்து பல நாட்களாகியும் திறக்கப்படாத ரேஷன் கடையை உடனடியாக திறக்க வேண்டும் என அல்லித்துறை, சாந்தாபுரம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணிகண்டம் யூனியனுக்குட்பட்ட அல்லித்துறைப் பஞ்சாயத்தில் சாந்தாபுரம் கிராமம் உள்ளது. இங்கு 600க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். சாந்தாபுரத்தில் ரேஷன் கடைக்கு சொந்த இடம் இல்லாததால், வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. சாந்தாபுரம் ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்ட அரசு முடிவு செய்தது. இதையடுத்து, ஊரக உள்கட்டமைப்பு திட்டம் 2010-2011ன் கீழ் 2.80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய ரேஷன் கடை கட்டும் பணி துவங்கியது. 80 சதவீதம் பணிகள் நடந்து முடிந்த வேளையில், தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடந்தது. இதனால், ரேஷன் கடை கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. தேர்தல் முடிந்த பின் பணிகள் துவங்கின. தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற அன்று பணிகள் நிறைவடைந்தன. சாந்தாபுரம் ரேஷன் கடை கட்டி முடிந்து இரண்டு மாதங்கள் ஆகியும் இதுவரை திறக்கப்படவில்லை. வாடகை கட்டிடத்திலேயே ரேஷன் கடை இயங்கி வருகிறது. புதிய கட்டிடடத்தில் சிறுவர்கள் விளையாடுவதும், விவசாய கூலி தொழிலாளர்கள் ஓய்வெடுக்கவும் பயன்படுகிறது. எனவே, புதிதாக கட்டி முடிக்கப்பட்ட சாந்தாபுரம் ரேஷன் கடையை உடனடியாக திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். * ஜெ., எதிர்ப்பு வேட்பாளரால் தாமதமா?: ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை எதிர்த்து தி.மு.க., சார்பில் சாந்தாபுரம் தி.மு.க., கிளைச்செயலாளர் ஆனந்த் போட்டியிட்டு தோல்வியை தழுவினர். அவர் சார்ந்த ஊர் என்பதால் சாந்தாபுரம் ரேஷன்கடை கட்டி முடிக்கப்பட்டும் திறக்கப்படாமல் உள்ளதோ என்ற கேள்வி மக்கள் மனதில் தோன்றியுள்ளது.