/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/நன்னிலம் பகுதி மாணவர்களுக்கு ஒளிமயமான வாழ்க்கை அமையும் :தமிழக முதல்வர் ஜெ., வாழ்த்துநன்னிலம் பகுதி மாணவர்களுக்கு ஒளிமயமான வாழ்க்கை அமையும் :தமிழக முதல்வர் ஜெ., வாழ்த்து
நன்னிலம் பகுதி மாணவர்களுக்கு ஒளிமயமான வாழ்க்கை அமையும் :தமிழக முதல்வர் ஜெ., வாழ்த்து
நன்னிலம் பகுதி மாணவர்களுக்கு ஒளிமயமான வாழ்க்கை அமையும் :தமிழக முதல்வர் ஜெ., வாழ்த்து
நன்னிலம் பகுதி மாணவர்களுக்கு ஒளிமயமான வாழ்க்கை அமையும் :தமிழக முதல்வர் ஜெ., வாழ்த்து
ADDED : ஜூலை 26, 2011 12:36 AM
திருவாரூர்: ''நன்னிலம் கல்லூரி மூலம் மாணவர்களுக்கு ஒளிமயமான வாழ்க்கை அமையும்,'' என்று கல்லூரி துவக்க விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், திருச்சி பாரதிதாசன் பல்கலை உறுப்புக் கல்லூரியாக, கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவக்க விழா நேற்று நடந்தது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, மதியம் இரண்டு மணியளவில், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து 'வீடியோ கான்பிரன்ஸிங்' முறையில் கல்லூரியினை துவக்கி வைத்தார். பின், மாணவரிடையே முதல்வர் ஜெயலலிதா பேசியபோது, ''நன்னிலம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இன்று (நேற்று) நிறைவேறி உள்ளதால் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். நல்ல முறையில் இக்கல்லூரியினை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இக்கல்லூரி மூலம் மாணவர்களுக்கு ஒளிமயமான வாழ்க்கை அமையும்,'' என்றார். மாவட்ட கலெக்டர் முனியநாதன் பேசியபோது, ''கடந்த வாரம் திருத்துறைப்பூண்டியிலும், தற்போது நன்னிலத்திலும் முதல்வர் கல்லூரியை திறந்து வைத்துள்ளார். மாவட்ட மக்களின் சார்பில் முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்,'' என்றார். நன்னிலம் எம்.எல்.ஏ., காமராஜ் பேசியபோது, ''விவசாய பகுதியாக உள்ள நன்னிலத்தில் கல்லூரி துவங்கப்பட்டதன் மூலம் விவசாயிகளின் குழந்தைகளுக்கு முதல்வர் ஒளிவிளக்கு ஏற்றியுள்ளார். முதல்வருக்கு தொகுதியின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்,'' என்றார். கல்லூரி மாணவி வித்யா, மாணவர் பிரகாஷ் பேசியபோது, ''நாங்கள் இருவரும் விவசாய குடும்பத்தில் பிறந்தவர்கள். இந்த பகுதியில் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்ததுக்கு பெற்றோர், மாணவர் சார்பில் முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்,'' என்றனர். விழாவில், பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் மீனா, பி.ஆர்.ஓ., ராஜகோபால், திருவாரூர் ஆர்.டி.ஓ., ராமன், நகராட்சி கமிஷனர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
புதிதாக துவங்கப்பட்டுள்ள இக்கல்லூரி, நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிகமாக நடக்கிறது. பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்.சி., கணிதம், பி.பி.ஏ., பாடப்பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் 40 மாணவர் என 200 மாணவர் சேர்க்கப்படுகின்றனர்.