/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சிட்டா பிரச்னைக்கு கொ.மு.க., யோசனைசிட்டா பிரச்னைக்கு கொ.மு.க., யோசனை
சிட்டா பிரச்னைக்கு கொ.மு.க., யோசனை
சிட்டா பிரச்னைக்கு கொ.மு.க., யோசனை
சிட்டா பிரச்னைக்கு கொ.மு.க., யோசனை
ADDED : ஜூலை 28, 2011 09:27 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் கம்ப்யூட்டர் பிரிண்டர்
பழுதடையும் போது, பிரவுசிங் சென்டரில் நகல் எடுத்து வந்தால் அரசு முத்திரை
வைத்து கொடுக்க வேண்டும் என்று கொ.மு.க., வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொ.மு.க., மாவட்ட செயலாளர் நித்தியானந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை
:விவசாயிகளின் பிரதான தேவையான கம்ப்யூட்டர் சிட்டா ஒவ்வொரு தாலுகா
அலுவலகத்திலும் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு கம்ப்., சிட்டா வழங்க
பிரதி ஒன்றுக்கு 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. காலையில் பதிவு
செய்யும் விவசாயிகளுக்கு மாலைக்குள் சிட்டா வழங்க வேண்டும் என்பது அரசு
உத்தரவு. ஆனால் பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் கம்ப்யூட்டர் பிரிண்டர்
கோளாறு காரணமாக, சிட்டா வழங்காமல் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
விவசாயிகளின் அத்தியாவசிய தேவையான கம்ப்யூட்டர் சிட்டா வழங்க அதிகாரிகள்
போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் துறை சார்பில்
சிறு மற்றும் குறு விவசாயிகள் கணக்கெடுப்பு நடக்கும் நிலையில், விவசாயிகள்
தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள சிட்டா மிகவும் அவசியமாக உள்ளது. தேவையான
நேரத்தில் சிட்டா கிடைக்காவிட்டால், சிறு மற்றும் குறு விவசாயிகள்
பாதிப்புக்கு உள்ளாவார்கள். தாலுகா அலுவலகத்திலுள்ள கம்ப்யூட்டரில் பழுது
ஏற்பட்டு பிரிண்ட் எடுக்க முடியாவிட்டால், தனியார் பிரவுசிங் சென்டரில்
நகல் எடுத்து வந்தால் தாலுகா அலுவலகத்தில் அந்த நகலுக்கு சீல் வைத்து
கையெழுத்திட்டு அனுமதி வழங்க வேண்டும். மாறாக, கம்ப்., சிட்டா வழங்குவது
நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்று அறிவிப்பு எழுதி ஒட்டி விவசாயிகளை
அலைக்கழித்தால், கொ.மு.க., சார்பில் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு,
கொ.மு.க., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


