ADDED : ஜூலை 28, 2011 09:30 PM
பொள்ளாச்சி : நூலகத்துறையில் இருக்கும் காலக்கடப்பு கட்டணம் மற்றும் ஆண்டு
சந்தாவை உயர்த்த வேண்டும் என பொதுநூலகத்துறை அதிகாரிகள் வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 25க்கும்
மேற்பட்ட கிளை மற்றும் ஊர்ப்புற நூலகங்கள் உள்ளன.பொள்ளாச்சி
பொதுநூலகத்துறையினர் கூறியதாவது: பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்புற
பகுதிகளில் உள்ள நூலகங்களில் சில்லரை காசுகளுக்கு கடுமையான தட்டுப்பாடு
உள்ளது. இதனால், காலகடப்பு கட்டணம் வாரத்திற்கு 50 காசு என்று இருப்பதை ஒரு
ரூபாயாக மாற்றம் செய்ய வேண்டும். ஆண்டு சந்தா நகரப்புறங்களில் 10 ரூபாய்
வசூலிக்கப்படுகிறது. கிராமப்புறங்களில் ஆண்டு சந்தாவாக ஐந்து ரூபாய்
வசூலிக்கப்படுகிறது. இதனால், அனைத்து நூலகங்களுக்கும் ஒரே மாதிரியான ஆண்டு
சந்தா வழங்கப்பட வேண்டும். இதுபோன்று கோரிக்கைகள் உயரதிகாரிகளிடம்
வலியுறுத்தப்பட்டுள்ளது, என்றனர்.


