/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வருமான வரி படிவம் சமர்ப்பிக்க பொள்ளாச்சியில் சிறப்பு கவுன்டர்வருமான வரி படிவம் சமர்ப்பிக்க பொள்ளாச்சியில் சிறப்பு கவுன்டர்
வருமான வரி படிவம் சமர்ப்பிக்க பொள்ளாச்சியில் சிறப்பு கவுன்டர்
வருமான வரி படிவம் சமர்ப்பிக்க பொள்ளாச்சியில் சிறப்பு கவுன்டர்
வருமான வரி படிவம் சமர்ப்பிக்க பொள்ளாச்சியில் சிறப்பு கவுன்டர்
ADDED : ஜூலை 28, 2011 09:31 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி வருமான வரித்துறை அலுவலகத்தில் வருமான வரி படிவம் சமர்ப்பிக்க சிறப்பு 'கவுன்டர்கள்' அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வருமான வரி படிவம் சமர்ப்பிக்க வரும் 31ம் தேதி கடைசி நாள் என்பதால், மக்கள் அதிகளவில் வருமான வரித்துறை அலுவலகத்திற்கு வருகின்றனர். அதனால், கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு 'கவுன்டர்கள்' அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு 'கவுன்டர்கள்' நேற்று துவங்கி மூன்று நாட்கள்(28ம் தேதி முதல் 31ம் தேதி) வரை செயல்படும். பொள்ளாச்சி வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: பொள்ளாச்சி, வால்பாறை போன்ற பகுதிகளில் இருந்து வருமான வரி படிவம் சமர்ப்பிக்க இந்த மாதம் 31ம் தேதி கடைசி நாள். இந்நிலையில் மக்கள் கூட்டத்தை தவிர்க்க வருமான வரித்துறை அலுவகத்தில் சிறப்பு 'கவுன்டர்கள்' நேற்று முதல் மூன்று நாட்கள் வரை சிறப்பு கவுன்டர்கள் செயல்படுகிறது. சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் இயங்கும். காலை 10.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை இடைவிடாமல் செயல்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வருமான வரி படிவம் சமர்ப்பிக்க சில வரைமுறைகள்: சம்பள வருமானம் மற்றும் வங்கி சேமிப்பு கணக்கில் வருமானம் உள்ளவர்கள். வட்டி வருமானம் 10,000 மிகாமல் இருக்க வேண்டும். சம்பள வருமானம் உள்ளவர்களுக்கு உரிய 'டிடக்ஷன்ஸ்' (கழிவுகள்) அனைத்தும் கழிக்கப்பட்டு பின் வரும் மொத்த வருமானம் 5 லட்சம் வரை இருக்க வேண்டும். ஒரு ஆண்டில் ஒரு நிறுவனத்தில் மட்டும் சம்பளம் பெறுபவர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும். ஓய்வூதியம் பெறுவோர்க்கும் இந்த திட்டம் பொருந்தும். சம்பளம் மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு வட்டி வருமானம் தவிர வேறு வருமானம் உள்ளவர்களுக்கும், வருமானவரி 'ரீ-பண்ட்' கோருவோருக்கு இந்த திட்டம் பொருந்தாது. வருமான வரி படிவம் தாக்கல் செய்ய கோரி வருமான வரிச்சட்டம் 142(1), 148, 153 'ஏ' மற்றும் 153 'சி' ஆகிய பிரிவுகளில் நோட்டீஸ் அனுப்பப்படுபவர்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது.இதுபோன்ற வரைமுறைகள் பயன்படுத்தி இந்த வருமான வரி படிவத்தை வரும் 31 தேதிக்குள் சமர்ப்பிக்கலாம் என்றனர்.


