/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/சொரிமுத்து அய்யனார் கோயிலில்இன்று ஆடி அமாவாசை திருவிழாசொரிமுத்து அய்யனார் கோயிலில்இன்று ஆடி அமாவாசை திருவிழா
சொரிமுத்து அய்யனார் கோயிலில்இன்று ஆடி அமாவாசை திருவிழா
சொரிமுத்து அய்யனார் கோயிலில்இன்று ஆடி அமாவாசை திருவிழா
சொரிமுத்து அய்யனார் கோயிலில்இன்று ஆடி அமாவாசை திருவிழா
ADDED : ஜூலை 30, 2011 12:49 AM
விக்கிரமசிங்கபுரம்:காரையார் காணிக்குடியிருப்பு சொரிமுத்து அய்யனார்
கோயிலில் இன்று (30ம் தேதி) நடக்கும் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு
கோயிலுக்கு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.நெல்லை மாவட்டம் காரையார்
காணிக்குடியிருப்பு சொரிமுத்து அய்யனார் கோயிலின் ஆடி அமாவாசை திருவிழா
மிகவும் பிரசித்தி பெற்றது.
பண்டைய காலத்தில் கைலாய மலையில் சிவன்-பார்வதி
திருமணம் நடந்தபோது பூமியை சமன்படுத்த அகஸ்தியர் பொதிகை மலை சென்றார்.
அப்போது தற்போது கோயில் இருக்கும் பகுதியில் அகஸ்தியர் லிங்க பூஜை
செய்தார். காலப்போக்கில் அந்த லிங்கம் மண்ணால் மூடப்பட்டது. பிற்காலத்தில்
வாணிபம் விஷயமாக மாட்டு வண்டிகள் அவ்வழியாக சென்றபோது ஒரு கல்லில் மாட்டு
குழம்புகள் பட்டு ரத்தம் கசிந்தது என்றும், இவ்வழியாக சென்ற பசு மாடுகள்
ஓரிடத்தில் மட்டும் பால் சொரிந்தன என்ற சம்பவங்கள் நடந்துள்ளது. இந்த
விஷயம் குறித்து அப்பகுதி மக்களுக்கு தகவல் தெரிந்து சம்பவ இடத்தில் தோண்டி
பார்த்தபோது அங்கு ஒரு லிங்கம் இருந்ததை கண்டு பரவசமடைந்தனர்.பின்னர்
அங்கு கோயில் எழுப்பி சுவாமி தரிசனம் செய்து வந்தனர். அகஸ்தியர் வழிபட்ட
லிங்கம் என்பதால் காலப்போக்கில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்க
துவங்கியது. மேலும் பந்தல மன்னர் அரண்மனையில் வளர்ந்து வந்த சுவாமி
அய்யப்பன் தனது சிறுவயதில் தற்போது கோயில் இருக்கும் இடத்திற்கு வந்து வீர
விளையாட்டுக்களை கற்க வந்தார் என்றும் ஸ்தல புராணங்கள்
தெரிவிக்கின்றன.இக்கோயிலில் மகாலிங்கம், சொரிமுத்து அய்யனார், சங்கிலி
பூதத்தார், பிரம்மராட்சஸி, தளவாய்மாடன், தூசிமாடன், பட்டவராயர், அகஸ்தியர்,
பேச்சியம்மன், சுடலைமாடன், கரடிமாடசாமி ஆகிய சுவாமிகள் குடி கொண்டு
பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இக்கோயிலில் இன்று நடக்கும் ஆடி
அமாவாசை திருவிழாவை முன்னிட்டு கடந்த 21ம் தேதி கோயிலில் கால்நாட்டு வைபவம்நடந்தது.