/உள்ளூர் செய்திகள்/கரூர்/வெள்ளாளர் பள்ளியில் "கீரின் டே' குதூகலம்வெள்ளாளர் பள்ளியில் "கீரின் டே' குதூகலம்
வெள்ளாளர் பள்ளியில் "கீரின் டே' குதூகலம்
வெள்ளாளர் பள்ளியில் "கீரின் டே' குதூகலம்
வெள்ளாளர் பள்ளியில் "கீரின் டே' குதூகலம்
ADDED : ஜூலை 31, 2011 01:02 AM
கரூர்: கரூர் கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 'கிரீன் டே' கொண்டாடப்பட்டது.விழாவில் ஒவ்வொரு குழந்தையும் தங்கள் வீட்டிலுள்ள பச்சை நிற பொருளை கொண்டு வந்து அவற்றின் பயன்களை விளக்கி கூறினர்.
மேலும், இலைகளால் ஆன ஆடைகளை அணிந்து வந்து அதன்மூலம் பச்சை நிறத்தையும் அதன் பயன்களையும் வெளிப்படுத்தினர். குழந்தைகள் கொண்டு வந்த பச்சைநிற பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனை பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் பார்வையிட்டனர்.கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் நாச்சிமுத்து, செயலாளர் மனோகரன், பொருளாளர் ஜெயபாலன், உபதலைவர் பெரியசாமி, இணைச்செயலாளர் வாசுதேவன், பள்ளி தாளாளர் கணபதி, பள்ளி கமிட்டி உறுப்பினர் விசா சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.


