/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாநகராட்சி விலைப்புள்ளியை மாற்றியமைக்க கோரிக்கைமாநகராட்சி விலைப்புள்ளியை மாற்றியமைக்க கோரிக்கை
மாநகராட்சி விலைப்புள்ளியை மாற்றியமைக்க கோரிக்கை
மாநகராட்சி விலைப்புள்ளியை மாற்றியமைக்க கோரிக்கை
மாநகராட்சி விலைப்புள்ளியை மாற்றியமைக்க கோரிக்கை
ADDED : ஆக 03, 2011 01:11 AM
கோவை : 'மாநகராட்சி விலைப்புள்ளி பட்டியலை மாற்றி அமைக்க வேண்டும்' என, ஒப்பந்ததாரர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கோவை மாநகராட்சி ரோடு மற்றும் சிவில் பணிகள் ஒப்பந்ததாரர்கள் சங்க உறுப்பினர்கள், மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளித்தனர். அதில், மணல், செங்கல், சிமென்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. ஒப்பந்ததாரர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் பழைய விலைப்புள்ளி பட்டியலை மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் உதயகுமார் கூறுகையில், ''சங்கத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய நிர்வாகிகளை, மாநகராட்சி கமிஷனரிடம் அறிமுகப்படுத் தினோம். கடந்த மார்ச் மாதம் நிர்ணயம் செய்த விலைப்புள்ளி பட்டியலின் படி, பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. தற்போது, செங்கல், மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையில் மாறுதல் ஏற்பட்டுள்ளதால், ஒப்பந் ததாரர்கள் நஷ்டமடைகின்றனர். மாநகராட்சி நிர்ணயிக்கும் விலைப்புள்ளி பட்டியலை மாற்றியமைக்க கோரிக்கை மனு அளித்தோம். இதற்கு, 'பொதுப்பணித்துறையோடு இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கமிஷனர் கூறியுள்ளார்'' என்றார்.


