Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ரமலான் நோன்பு அட்டை வழங்கல்

ரமலான் நோன்பு அட்டை வழங்கல்

ரமலான் நோன்பு அட்டை வழங்கல்

ரமலான் நோன்பு அட்டை வழங்கல்

ADDED : ஆக 03, 2011 01:17 AM


Google News
கோவை : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், ரமலான் பிறை பார்த்தல் மற்றும் நோன்பு அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கோவை, காமராஜர் வீதியிலுள்ள, கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவர் நிசாருதீன் தலைமை வகித்தார்.

மாநில செயலாளர் முகமது ரபி, ரமலான் நோன்பு அட்டையை வழங்க, உலமா தலைவர் அப்துல் ரகீம் இம்தாதி பெற்றுக்கொண்டார். தொடர்ந்து நடந்த கூட்டத்தில், மாவட்டத் திலுள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் பாதுகாப்பு போடவேண்டும். வெளி மாவட்டம் மற்றும் மாநில்களிலிருந்து வந்து தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு, சகர் உணவுக்காக இரவு நேரத்தில் கடைகளை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். ரமலான் மாதத்துக்காக, பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி வழங்க, 3801 டன் அரிசி ஒதுக்கீடு செய்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பது. சமச்சீர் கல்வி திட்டத்தில், உருது, அரபி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிப் பாடங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது; இதனை மீண்டும் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us