/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/டப்பா டவுன் பஸ்; கிராம மக்கள் அவதிடப்பா டவுன் பஸ்; கிராம மக்கள் அவதி
டப்பா டவுன் பஸ்; கிராம மக்கள் அவதி
டப்பா டவுன் பஸ்; கிராம மக்கள் அவதி
டப்பா டவுன் பஸ்; கிராம மக்கள் அவதி
ADDED : ஆக 03, 2011 10:55 PM
அன்னூர் : காந்திபுரத்தில் இருந்து பொன்னே கவுண்டன்புதூர் வழித்தடத்தில் மிகவும் பழைய டவுன்பஸ் இயக்கப்படுவதால் அடிக்கடி பழுது ஏற்பட்டு, மக்கள் அவதிப்படுகின்றனர்.
காந்திபுரத்திலிருந்து சரவணம்பட்டி, குரும்பப்பாளையம், கோவில்பாளையம், தேவம்பாளையம், அருகம்பாளையம், செட்டிபாளையம் வழியாக பொன்னே கவுண்டன்புதூருக்கு, அரசு போக்குவரத்துக்கழகத்தின் 81ம் எண் டவுன் பஸ் தினமும் ஆறு முறை இயக்கப்படுகிறது. இந்த பஸ் அடிக்கடி பழுதாகி நின்று விடுகிறது என, மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். பொன்னே கவுண்டன்புதூர் மக்கள் கூறிய தாவது:இங்கு சுற்று வட்டார மக்கள் கோவை மற்றும் அன்னூருக்கு வேலைக்கு செல்லவும், மாணவ, மாணவியர் கல்லூரிகளுக்கு செல்லவும், இந்த டவுன்பஸ் மிகவும் உபயோகமாக இருக்கிறது. இப்பகுதியில் மேல்நிலைப்பள்ளி இல்லை. கோவில்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லவும், குக்கிராம மக்கள் பொன்னே கவுண்டன்புதூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு செல்லவும் இந்த பஸ்சை பயன்படுத்துகின்றனர். வழக்கமாக டவுன்பஸ்களில் தினமும் ஆறு முதல் ஏழாயிரம் ரூபாய் வசூலாகும். ஆனால், இந்த டவுன்பஸ் எட்டாயிரத்து 500 முதல் ஒன்பதாயிரம் வரை வசூலாகிறது. எப்போதும் பஸ் நிரம்பி வழியும். அதிக வசூல் தரும் இந்த வழித்தடத்தில் புதிய பஸ்சை இயக்காமல் பல ஆண்டுகள் இயக்கப்பட்ட, பழைய பஸ்சை இயக்குகின்றனர். இந்த பஸ் அடிக்கடி பழுதாகி விடுகிறது; இந்த வழித்தடத்தில் புதிய பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கிராம மக்கள் தெரிவித்தனர்.


