ரோட்டோர மரத்தை வெட்டியது நகராட்சி தடுத்து நிறுத்தியது நெடுஞ்சாலை துறை
ரோட்டோர மரத்தை வெட்டியது நகராட்சி தடுத்து நிறுத்தியது நெடுஞ்சாலை துறை
ரோட்டோர மரத்தை வெட்டியது நகராட்சி தடுத்து நிறுத்தியது நெடுஞ்சாலை துறை
ADDED : ஆக 07, 2011 12:59 AM

சிவகாசி : சிவகாசியில் ரோடு விரிவாக்கத்திற்காக நகராட்சி அதிகாரிகளால், ரோட்டோர மரங்கள் வெட்டப்பட்டன.
நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். சிவகாசி பஸ் ஸ்டாண்ட் முதல் சாத்தூர் ரோடு, கே.டி.ஆர்., பாலம் வரை, ரோடு விரிவாக்கத்திற்காக ரோட்டோர மரங்களை வெட்டும் பணியில், நகராட்சி மற்றும் மின்வாரிய அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை ஈடுபட்டனர். மரங்களை அனுமதியின்றி வெட்ட கூடாது என கூறி, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தடுத்தனர். இதன் பாதுகாப்பிற்காக சாலை பணியாளர்களையும் நிறுத்தினர். மரம் வெட்டும் பணி நிறுத்தப்பட்டது.
நகராட்சி இன்ஜினியர் முருகனிடம் கேட்டபோது ,'' மரத்தை நாங்கள் வெட்ட வில்லை, எங்களுக்கு தெரியாது,'' என்றார்.
நெடுஞ்சாலை உதவி கோட்டபொறியாளர் சுரேஷ் ,''கூறுகையில், போக்குவரத்திற்கு இடையூறாக மரம் இருந்தாலும் வெட்டுவதற்கு ஆர்.டி.ஓ., அனுமதி வேண்டும். அவரது அனுமதியை பெற்று நெடுஞ்சாலை துறை விதிப்படி நாங்கள்தான் மரத்தின் வயது, தன்மைக்கு ஏற்ப மதிப்பீடு செய்து ஏலம் விடுவோம் . எவ்வித அனுமதியும் பெறாமல் மரம் வெட்டியதால் தடுத்து நிறுத்தினோம்,'' என்றார்.
நகராட்சி துணை தலைவர் அசோகன் கூறுகையில், ''போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மரம், மின் கம்பங்களை அகற்ற ஆறு மாதங்களுக்கு முன் ஆர்.டி.ஓ.,விடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதி இருந்தோம். அனுமதி கிடைத்ததால் மரம் வெட்டப்பட்டது,'' என்றார்.
முனுசாமி ஆர்.டி.ஓ., கூறுகையில், ''மரம் வெட்டுவதற்கு அனுமதி கேட்டதின் படி சில நாட்களுக்கு முன் அனுமதி வழங்கப்பட்டது,'' என்றார்.


