/உள்ளூர் செய்திகள்/சேலம்/6 பேர் கொலை நடந்த வீட்டில் பொருட்கள் சூறை6 பேர் கொலை நடந்த வீட்டில் பொருட்கள் சூறை
6 பேர் கொலை நடந்த வீட்டில் பொருட்கள் சூறை
6 பேர் கொலை நடந்த வீட்டில் பொருட்கள் சூறை
6 பேர் கொலை நடந்த வீட்டில் பொருட்கள் சூறை
ADDED : ஆக 09, 2011 01:49 AM
பனமரத்துப்பட்டி: சேலம், தாசநாயக்கன்பட்டியில், ஆறு பேர் கொலை நடந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், வீட்டினுள் இருந்த பொருட்களை சூறையாடிச் சென்றுள்ளனர்.சேலம், தாசநாயக்கன்பட்டி, சவுடாம்பிகா நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் குப்புராஜ், சந்திரா, சந்தானலட்சுமி, கௌத்தம், ரத்தினம், விக்னேஸ்வரி ஆகிய, 6 பேர், 2010 ஆகஸ்ட் 12ம் தேதி மர்மமான முறையில் வெட்டிக்கொல்லப்பட்டனர்.சொத்து பிரச்னை காரணமாக தன் குடும்பத்தை கொன்றதாக, குப்புராஜ் மகன் சிவகுரு நீதிமன்றத்தில் சரணடைந்தார். சி.பி.சி.ஐ.டி., போலீஸார் விசாரித்து, தி.மு.க.,வை சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் சுரேஷ்குமார் உள்ளிட்ட, ஒன்பது பேரை கைது செய்தனர்.கொலை நடந்த வீட்டை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் தீவிரமாக சோதனை செய்து, பல்வேறு ஆதாரங்களை கைபற்றியுள்ளனர். குப்புராஜ் வீடு மற்றும் தோட்டம், போலீஸாரின் கண்காணிப்பில் இருந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன், குப்புராஜ் தோட்டம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.தொடர்ந்து, கடந்த மாதம் குப்புராஜ், சந்தான லட்சுமி, கௌத்தம் ஆகிய மூன்று பேர் கொலை செய்யப்பட்டு கிடந்த படுக்கையறை, மர்மமான முறையில் தீ வைத்து எரிக்கப்பட்டது.
வீடு தீ வைக்கப்பட்ட வழக்கில், மூன்று பேரின் கால்தடத்தை பதிவு செய்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், நேற்று குப்புராஜ் மனைவி சந்திரா கொலை செய்யப்பட்டு கிடந்த அறையின் பூட்டு உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அந்த அறையில் இருந்த இரண்டு பீரோவை உடைத்து, அதிலிருந்த பொருட்களை சூறையாடியுள்ளனர் அதேபோல், மாடிப்படி அருகே இருந்த அறை, மாடியில் இருக்கும் அறை உள்ளிட்ட மூன்று அறைகளின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது.தகவலறிந்த சேலம் ரூரல் டி.எஸ்.பி., வைத்தியலிங்கம், எஸ்.ஐ., விஜயகுமாரி, பெரியசாமி ஆகியோர், உடைக்கப்பட்ட பூட்டு மற்றும் பீரோவை பார்வையிட்டனர். உடைக்கப்பட்ட மூன்று அறை மற்றும் மெயின் கேட்டுக்கு பூட்டு போட்டு, போலீஸார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.செய்யப்பட்ட குப்புராஜின் மகள் விஜயலட்சமி கூறியதாவது:இன்று(நேற்று) மதியம் 12 மணிக்கு, நான், என் மகன் ஸ்ரீதர், மகள் தீபா ஆகியோர் வீட்டுக்கு வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. அறைக்கு உள்ளே சென்று பார்த்தபோது, இரண்டு பீரோ உடைத்து, அதிலிருந்த பொருட்கள் எல்லாம் அறை முழுவதும் சிதறிக் கிடந்தது.பீரோவில், வெள்ளி பொருட்கள், பணம், சொத்துப் பத்திரம் ஆகியவை இருந்தது. பீரோவில் இருந்த துணி மட்டும் அறை முழுவதும் சிதறிக் கிடக்கிறது. அதில் இருந்த மீதி பொருட்களை காணவில்லை. போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.'ஆறு பேர் கொலை நடந்த வீடு, தோட்டம் உள்ள பகுதிக்கு வர பொதுமக்கள் அஞ்சுகின்றனர். இங்கு நீங்கள் மட்டும் அடிக்கடி வர்றீங்க. உங்களுக்கு இந்த சொத்தில் பங்கு உள்ளது என, நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கிய பின் இங்கு வாங்க. அதுவரைக்கும் இங்கு வரவேண்டாம்' என, விஜயலட்சுமியை, போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.


