லாரி ஸ்டிரைக்: மதுரையில் காய்கறி விலை உயராது?
லாரி ஸ்டிரைக்: மதுரையில் காய்கறி விலை உயராது?
லாரி ஸ்டிரைக்: மதுரையில் காய்கறி விலை உயராது?
ADDED : ஆக 19, 2011 01:31 AM

மதுரை : டீசல் மற்றும் சுங்கவரி உயர்வை கண்டித்து, தென்மாநிலங்களில் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
இதனால், மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் காய்கறி விலை உயராது என்கின்றனர் வியாபாரிகள்.
சங்கத் தலைவர் முருகன் கூறியதாவது : மார்க்கெட்டிற்கு தேவைக்கு அதிகமாக காய்கறி வரத்து அதிகரித்துள்ளதால் விலை சீராக உள்ளது. அவரை உட்பட சில காய்கறிகள் கிலோ ரூ.5க்கு விற்கப்படுகிறது. காய்கறிகள் அழுகக்கூடியது என்பதால், இதை இருப்பு வைத்து பாதுகாக்க முடியாது. இதன் காரணமாக, வேன்கள், மினிலோடு
ஆட்டோக்களில் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. வெளிமாநிலங்களில் இருந்து லாரிகளில் கொண்டு வரப்படும் பெல்லாரி வெங்காயம் தடைபட்டுள்ளதால் அதன் விலை மட்டும் உயர வாய்ப்புள்ளது. கடந்தாட்சியில், லாரி ஸ்டிரைக்கின்போது, அரசு பஸ்களில் காய்கறிகளை கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நடவடிக்கையை தற்போதும் மேற்கொண்டால், காய்கறி விலை உயர்வை கட்டுப்படுத்தலாம், என்றார்.


