/உள்ளூர் செய்திகள்/சேலம்/தனியார் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்தனியார் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்
தனியார் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்
தனியார் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்
தனியார் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : ஆக 19, 2011 02:23 AM
சேலம்: சேலம், சிவதாபுரத்தில் உள்ள சிவராஜ் சித்த வைத்திய மருத்துவக் கல்லூரிக்கு வந்த வெடி குண்டு மிரட்டலால், பரபரப்பு ஏற்பட்டது.
சேலம், சிவதாபுரம் மெயின் ரோட்டில் சிவராஜ் சித்த வைத்தியக் கல்லூரி செயல்படுகிறது. இந்த கல்லூரியில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். நேற்று காலையில் வழக்கம் போல் வகுப்புகள் துவங்கிய நிலையில், கல்லூரி அலுவலகத்துக்கு வந்த போனில் பேசிய மர்ம நபர், கல்லூரி வளாகத்தில் வெடி குண்டு இருப்பதாகவும், அது விரைவில் வெடிக்கும் எனவும் தெரிவித்து, இணைப்பை துண்டித்து விட்டார். கல்லூரி நிர்வாகத்தினர், இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். மோப்ப நாயுடன் வந்த வெடி குண்டு நிபுணர்கள், கல்லூரி வளாகம், வகுப்பறைகள் அனைத்திலும் சோதனை நடத்தினர். சோதனையில், வெடி குண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்பட வில்லை. இதனால், வெறும் புரளி என்று தெரியவந்தது. சோதனை முடிந்த பின், கல்லூரி வழக்கம் போல் செயல்பட்டது. வெடி குண்டு மிரட்டலால் மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.


