ADDED : ஆக 21, 2011 11:37 PM
திருப்பூர் : 'நபார்டு' வங்கியின் மண்டல வளர்ச்சி அலுவலகம், திருப்பூரில்
துவக்கப்பட்டுள்ளது.வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி என்ற'நபார்டு'
வங்கியின் திருப்பூர் மண்டல வளர்ச்சி அலுவலகம் புதிதாக துவக்கப்பட்டுள்ளது.
இதன் துவக்க விழா, கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் மதிவாணன்
துவக்கி வைத்தார்.தமிழக மண்டல பொது மேலாளர் ரமேஷ் டென்கில்
பேசியதாவது:ஊரகப்பகுதிகளில் சாலை மேம்பாடு, பாலங்கள், நீர்ப்பாசன
திட்டங்கள், குடிநீர் திட்டங்கள்,பள்ளிகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்கள்
அமைக்கும் பணிக்கு மாநில அரசுக்கு இவ்வங்கி கடன் வழங்கும். கூட்டுறவு கடன்
சங்கங்கள் வளர்ச்சிக்கும் கடன் வழங்கப்படும். விவசாயிகளை ஒருங்கிணைத்து,
விவசாய தொழில் நுட்பங்கள், கடன் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு
ஏற்படுத்தப்படும். தொண்டு நிறுவனங்களுக்கு உதவும் வகையில், ஊரகப்
பகுதிகளில் சுய உதவிக்குழுக்கள் அமைத்தல், திறன் வளர்ப்பு பயிற்சி
நடத்துதல் உள்ளிட்ட பணிகளையும் இவ்வங்கி செயல்படுத்தும்,
என்றார்.டி.ஆர்.ஓ., கஜலட்சுமி, திட்ட அலுவலர் ரேணுகா தேவி, முன்னோடி வங்கி
மேலாளர் ராஜகோபால் முன்னிலை வகித்தனர். நபார்டு வங்கி திருப்பூர் மண்டல
உதவி பொது மேலாளர் ஸ்ரீராம் வரவேற்றார். ஈரோடு உதவி பொது மேலாளர் சந்தானம்
நன்றி கூறினார்.


