/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/அனைத்து மருந்தாளுநர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்அனைத்து மருந்தாளுநர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்
அனைத்து மருந்தாளுநர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்
அனைத்து மருந்தாளுநர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்
அனைத்து மருந்தாளுநர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்
ADDED : ஆக 28, 2011 12:07 AM
கள்ளக்குறிச்சி : தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கூட்ட அரங்கில் நடந்தது.மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார்.
மாநில துணைத் தலைவர் செல்வமணி, மாவட்ட செயலாளர் கந்தசாமி முன்னிலை வகித்தனர். துணை தலைவர் மலர்கொடி வரவேற்றார். முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் உதயகுமார், மாநில தலைவர் ராம்ராஜ், பொது செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, அமைப்பு செயலாளர் கோவிந்தராஜ் பேசினர். முதல்வர் பொறுப்பேற்றுள்ள ஜெ.,விற்கு பாராட்டு தெரிவிப்பது, அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள மருந்தாளுநர் காலியிடங்களை நிரப்ப வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட அமைப்பு செயலாளர் மணிமாறன், நிர்வாக குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், அன்புதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.


