/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லையில் ரவுடி கொலை 5பேருக்கு வலைவீச்சுநெல்லையில் ரவுடி கொலை 5பேருக்கு வலைவீச்சு
நெல்லையில் ரவுடி கொலை 5பேருக்கு வலைவீச்சு
நெல்லையில் ரவுடி கொலை 5பேருக்கு வலைவீச்சு
நெல்லையில் ரவுடி கொலை 5பேருக்கு வலைவீச்சு
ADDED : ஆக 28, 2011 01:12 AM
திருநெல்வேலி : நெல்லையில் ரவுடியை ஓட, ஓட விரட்டி கொலை செய்த 5பேரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நெல்லை அருகே மேல குன்னத்தூரை சேர்ந்தவர் திருமலை(35).
இவர் நேற்று முன்தினம் காலை கல்லணை பள்ளி அருகே பைக்கில் சென்ற போது, அந்த வழியாக வந்த பைக்கில் வந்த 5பேர் கொண்ட கும்பல் திருமலை வழிமறித்தனர்.
திருமலை பைக்கை அந்த இடத்திலேயே போட்டு விட்டு தெருவில் ஓடினார். அந்த கும்பல் விரட்டி சென்று அரிவாளால் திருமலையை வெட்டி கொலை செய்து விட்டு வெளியூருக்கு தப்பி சென்றனர். இது குறித்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் வரதாராஜூ, துணை கமிஷனர் ஜெயபாலன், உதவி கமிஷனர் ஸ்டாலின் விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் கூட்டுறவு பாங்க் கேஷியர் பால்சாமியின் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் திருமலையை 5பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது தெரிய வந்தது.
இக் கொலையில் தொடர்புடைய குன்னத்தூரை சேர்ந்த பால்சாமியின் உறவினர்கள் உட்பட 5பேரை இன்ஸ்பெக்டர் குருநாதன், சப்இன்ஸ்பெக்டர் லட்சுமிபிரபா தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


