/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லையில் பென்ஷனை அரசு வழங்க வலியுறுத்தி ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்நெல்லையில் பென்ஷனை அரசு வழங்க வலியுறுத்தி ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் பென்ஷனை அரசு வழங்க வலியுறுத்தி ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் பென்ஷனை அரசு வழங்க வலியுறுத்தி ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் பென்ஷனை அரசு வழங்க வலியுறுத்தி ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 30, 2011 12:07 AM
திருநெல்வேலி : நெல்லையில் பென்ஷனை அரசு வழங்க வலியுறுத்தி அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர், வாரிசுதாரர் நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஓய்வு பெற்ற நாளில் அனைத்து பணப்பலன்களை வழங்குவது, அனைத்து புறநகர் பஸ்களிலும் ஓய்வு பெற்றோர், பணியில் இறந்த தொழிலாளி மனைவிக்கு பஸ்பாஸ் வழங்குவது, பென்ஷனை அரசு வழங்குவது, 2005, 2007, 2010 ஆண்டு ஒப்பந்த பணப்பலன்களை ரொக்கமாக வழங்குவது, ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு மருத்துவக்காப்பீடு வழங்குவது, பணியில் உள்ள தொழிலாளிக்கு டி.ஏ., அளிப்பது போல ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு டி.ஏ., உயர்வு அளிப்பது, இறந்த தொழிலாளியின் வாரிசுக்கு வேலை அளிப்பது, கோர்ட் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது, காலதாமதமாக வழங்கும் பணத்திற்கு வட்டி அளிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வண்ணார்பேட்டை அரசுப்போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். சிஐடியு., மாவட்டச்செயலாளர் மோகன் துவக்கிவைத்தார். செயல் தலைவர் மனோகரன், பொதுச்செயலாளர் பத்மநாபன், உதவித்தலைவர் செல்வராஜ், ராமசாமி, அரசுப்போக்குவரத்து தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் பெருமாள், தலைவர் முத்துக்கிருஷ்ணன், மின்ஊழியர் சங்கம் சார்பில் முத்துக்குமாரசாமி, ராஜாமணி, பி.எஸ்.என்.எல்., சங்கம் சார்பில் கோபாலன், கிருஷ்ணன், குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்கம் சார்பில் விஸ்வநாதன், அரசு ஊழியர் சங்கம் சார்பில் நாதன் பேசினர். ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாநில பொதுச்செயலாளர் தேவராஜ் முடித்துவைத்தார். ராமையா பாண்டியன் நன்றி கூறினார்.


