/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வளர்ச்சிப் பணிகள்: மத்திய அதிகாரிகள் குழு ஆய்வுவளர்ச்சிப் பணிகள்: மத்திய அதிகாரிகள் குழு ஆய்வு
வளர்ச்சிப் பணிகள்: மத்திய அதிகாரிகள் குழு ஆய்வு
வளர்ச்சிப் பணிகள்: மத்திய அதிகாரிகள் குழு ஆய்வு
வளர்ச்சிப் பணிகள்: மத்திய அதிகாரிகள் குழு ஆய்வு
கடலூர் : கடலூர் மாவட்டத்தில் அனைத்து துறைகளின் செயல்பாடு குறித்து மத்திய அரசின் பல்வேறு துறைகளின் சார்பு செயலர் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இக்குழுவினர் நேற்று மாவட்டத்தில் செயல்படுத்தி வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடினர். பின்னர் அரசு தலைமை மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட சுகாதார பணிகளை ஆய்வு செய்தனர். அப்போது, நவீன வசதிகளுடன் கூடிய பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு உள்ளிட்ட வார்டுகளை ஆய்வு செய்தனர். பின்னர், மாவட்டத்தில் சுகாதார மேம்பாட்டிற்காக மேற்கொண்டுள்ள திட்டங்கள், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தனர். இக்குழுவினர் இன்று வேளாண் துறையின் செயல்பாடுகளை ஆய்வு செய்கின்றனர். அதனையொட்டி விருத்தாசலத்தில் உள்ள முந்திரி ஆராய்ச்சி பண்ணை மற்றும் கடலூரில் உள்ள கரும்பு ஆராய்ச்சி பண்ணைகளை ஆய்வு செய்கின்றனர்.
வரும் 8ம் தேதி கிராமப்புற வளர்ச்சிப் பணிகள் குறித்து மங்களூர் ஒன்றியத்திலும், 9ம் தேதி கடலூர் நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டப் பணி, பகல் 2 மணிக்கு நெல்லிக்குப்பம் மற்றும் பண்ருட்டி நகராட்சிகளில் குடிநீர் வினியோகம் குறித்தும், 12ம் தேதி பரங்கிப்பேட்டை ஒன்றிய பகுதிகளில் செயல்படுத்தி வரும் வளர்ச்சி பணிகளையும், 13ம் தேதி ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடு கல்வித்துறை செயல்பாடுகள் மற்றும் கட்டமைப்பு வசதிகளை பார்வையிடுகின்றனர். வரும் 14ம் தேதி கூட்டுறவு துறை செயல்பாடுகள் குறித்து இணைச் செயலருடன் கலந்தாலோசனை செய்கின்றனர். பின்னர் பொது வினியோகத் திட்டம் மற்றும் கைத்தறி கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளையும், 15ம் தேதி மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் அதற்கான கட்டமைப்பு வசதிகள் குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பின் கள ஆய்வு மேற்கொள்கின்றனர்.


