/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/வாள்மேல் நடந்த அம்மன் கோயில் திருப்பணி துவக்கம்வாள்மேல் நடந்த அம்மன் கோயில் திருப்பணி துவக்கம்
வாள்மேல் நடந்த அம்மன் கோயில் திருப்பணி துவக்கம்
வாள்மேல் நடந்த அம்மன் கோயில் திருப்பணி துவக்கம்
வாள்மேல் நடந்த அம்மன் கோயில் திருப்பணி துவக்கம்
ADDED : செப் 07, 2011 12:05 AM
இளையான்குடி : இளையான்குடியில் உள்ள வாள்மேல் நடந்த அம்மன் கோயிலை புனரமைக்கும் பணி துவங்கியது.இக்கோயில், 180 ஆண்டுகள் பழமையானவை.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், ஆயிர வைசிய சபையினரால் நடத்தப்படுகிறது. கடந்த 1987ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.ரூ.40 லட்சம் ஒதுக்கீடு: இக்கோயிலை புனரமைக்கும் பணியில் ஆயிரவைசிய சபையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, 40 லட்ச ரூபாயில் புதிதாக மகா மண்டபம், அலங்கார மண்டபம், முன்மண்டபங்கள் கட்டுமான பணி துவங்கியுள்ளது. புதிதாக மூன்று நிலை ராஜகோபுர கட்டுமான பணியும் நடக்கிறது. இக்கோயில் திருப்பணிகள் முடிந்து பங்குனியில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் தியாகராஜன், ஆயிரவைசிய சபை தலைவர் சதாசிவம், கவுரவ தலைவர் பாஸ்கரன் செய்து வருகின்றனர்.


