/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/தேயிலை தோட்டத்தில் புலி பெண் தொழிலாளர்கள் கிலிதேயிலை தோட்டத்தில் புலி பெண் தொழிலாளர்கள் கிலி
தேயிலை தோட்டத்தில் புலி பெண் தொழிலாளர்கள் கிலி
தேயிலை தோட்டத்தில் புலி பெண் தொழிலாளர்கள் கிலி
தேயிலை தோட்டத்தில் புலி பெண் தொழிலாளர்கள் கிலி
ADDED : செப் 07, 2011 12:55 AM
கூடலூர் : கூடலூர் பாண்டியாறு டான்டீ தேயிலை தோட்டத்தில் புலி நடமாட்டத்தை
கண்டு பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கூடலூர் பகுதியில் கடந்த சில
மாதங்களாக யானைகள் ஊருக்குள் நுழைந்து பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
யானை தாக்கியதில் சிலர் இறந்ததுடன் பல வீடுகள் சேதமடைந்தன. இதனால் மக்கள்
அச்சமடைந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 8.15 மணிக்கு பாண்டியாறு
தேயிலை தோட்டம் சரக எண் 3ஏ, பகுதியில் தொழிலாளர்கள் வேலைக்கு சென்றனர்.
தேயிலை தோட்டத்தில் உள்ள சில்வர் ஓக் மரத்தில் இருந்து புலி ஒன்று திடீரென
இறங்கி ஓடியுள்ளது. இதனை கண்ட தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். இதே பகுதியில்
மாலை 3 மணியளவிலும் அந்த புலி வந்துள்ளது. இதனை அறிந்த பெண் தொழிலாளர்கள்
சப்தம் இட்டனர். சிறிது நேரத்தில் புலி அங்கிருந்து வனப்பகுதிக்குள்
சென்றது. பகல் நேரத்திலேயே புலி நடமாட்டம் உள்ளது மக்கள் மத்தியில் கிலியை
ஏற்படுத்தி உள்ளது.


