Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/காங்கிரஸுடன் கூட்டணியா? கோபி தி.மு.க.,வினர் எதிர்ப்பு

காங்கிரஸுடன் கூட்டணியா? கோபி தி.மு.க.,வினர் எதிர்ப்பு

காங்கிரஸுடன் கூட்டணியா? கோபி தி.மு.க.,வினர் எதிர்ப்பு

காங்கிரஸுடன் கூட்டணியா? கோபி தி.மு.க.,வினர் எதிர்ப்பு

ADDED : செப் 07, 2011 01:41 AM


Google News

கோபிசெட்டிபாளையம்:உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி அறிவிக்கப்பட்டால், கோபி நகராட்சியில் காங்கிரஸ் போட்டியிடும் வார்டுகளில், சுயேச்சையாக போட்டியிட தி.மு.க.,வினர் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த 2004 லோக்சபா தேர்தலில் தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி மலர்ந்தது.

2006 சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல், 2009 லோக்சபா தேர்தலில் இக்கூட்டணி தொடர்ந்தது. ஸ்பெக்டரம் ஊழல் விவகாரம் பெரிய அளவில் வெடித்ததால், நடப்பாண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி மிக நீண்ட இழுபறிக்கு பின் ஒன்றிணைந்தது.



உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த வேலையில் தேர்தல் கமிஷன் இறங்கியுள்ளது. அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகள், தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை பெறுகின்றன. தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் சமீபத்தில், கோபியில் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் எம்.பி., சண்முகசுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ, வெங்கிடு, நகர செயலாளர் மணிமாறன், வார்டு செயலாளர்கள் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி அறிவிக்கப்பட்டால், உள்ளாட்சி தேர்தலும் அ.தி.மு.க., வுக்கே சாதகமாக அமையும். கூட்டணி அறிவிக்கப்பட்டு, கோபியில் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டால், அ.தி.மு.க.,வினருக்கு சாதகமான முடிவாக இருக்கும். தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி வேண்டாம். அப்படியே, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி அறிவிக்கப்பட்டால், கோபி நகராட்சியில் தி.மு.க.,வினரே சுயேச்சையாக போட்டியிடும் நிலைமை வரும். கட்சிக்காக உழைத்த, உண்மையான கட்சி தொண்டர்களுக்கு மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் சீட் வழங்க வேண்டும். சட்டசபை தேர்தலுக்கு பிறகு நடந்த ஆர்ப்பாட்டங்கள், முக்கிய கூட்டங்களில் கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்,' என தி.மு.க., வார்டு செயலாளர்கள் முதல் பிரதிநிதிகள் வரை அனைவரும் வலியுறுத்தி உள்ளனர். உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணிக்கு தி.மு.க., வினரிடையே எதிர்ப்பு கிளம்பி உள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us