பெண்களுக்கான வார்டு ஒதுக்கீடு 34ஆக உயர்வு
பெண்களுக்கான வார்டு ஒதுக்கீடு 34ஆக உயர்வு
பெண்களுக்கான வார்டு ஒதுக்கீடு 34ஆக உயர்வு
ADDED : செப் 08, 2011 04:32 AM
மதுரை : மதுரை மாநகராட்சி தேர்தலில் பெண்களுக்கான வார்டு ஒதுக்கீடு 33ல் இருந்து 34 ஆக உயர்கிறது.
உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் வார்டுகள் பிரிக்கும் பணி நடந்தது. 72 வார்டுகளை கொண்ட மாநகராட்சி, 100 ஆக விரிவாக்கம் செய்யப்பட்டால் 33 வார்டுகளில் பெண்கள் போட்டியிடுவது உறுதியானது. இதில் இரண்டு வார்டுகள் எஸ்.சி., பெண் வேட்பாளருக்கு ஒதுக்கப்படும். இதற்கான பட்டியல் தயாரிக்கும் பணியில் குளறுபடி இருந்ததால், வார்டுகள் ஒதுக்கீட்டில் குழப்பம் ஏற்பட்டது. மொத்த பெண் வாக்காளர்களை கணக்கிடுகையில், 33.3 சதவீதம் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி தேர்தலில், 34 வார்டுகளில் பெண்கள் போட்டியிடும் வகையில் வார்டுகள் ஒதுக்கீடு செய்யும் பணி நடந்து வருகிறது.


