/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/எக்ஸ் ரே டெக்னீசியன்கள் பற்றாக்குறையால் பாதிப்பு : ஸ்ரீவி.,யில் அவதிக்குள்ளாகும் நோயாளிகள்எக்ஸ் ரே டெக்னீசியன்கள் பற்றாக்குறையால் பாதிப்பு : ஸ்ரீவி.,யில் அவதிக்குள்ளாகும் நோயாளிகள்
எக்ஸ் ரே டெக்னீசியன்கள் பற்றாக்குறையால் பாதிப்பு : ஸ்ரீவி.,யில் அவதிக்குள்ளாகும் நோயாளிகள்
எக்ஸ் ரே டெக்னீசியன்கள் பற்றாக்குறையால் பாதிப்பு : ஸ்ரீவி.,யில் அவதிக்குள்ளாகும் நோயாளிகள்
எக்ஸ் ரே டெக்னீசியன்கள் பற்றாக்குறையால் பாதிப்பு : ஸ்ரீவி.,யில் அவதிக்குள்ளாகும் நோயாளிகள்
ADDED : அக் 08, 2011 11:14 PM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரி எக்ஸ் ரே பிரிவில் டெக்னீசியன்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் பாதிக்கின்றனர்.
இங்கு உள் நோயாளியாளாக 120 , வெளிநோயாளிகளாக 1000 பேர் தினமும் சிகிச்சை பெறுகின்றனர். இங்கு தினமும் 40 க்கும் அதிகமானோர் எக்ஸ்ரே எடுக்க வருகின்றனர். இங்குள்ள எக்ஸ் ரே பிரிவில் இரு ரேடியோகிராபர்கள், ஒரு இருட்டறை உதவியாளர், ஒரு எக்ஸ்-ரே லேப் உதவியாளர் என நான்கு பணியிடங்கள் உள்ளன. ஆனால் தற்போது ஒரு ரேடியோகிராபர் மட்டுமே பணியில் உள்ளார். இதனால் அவரே அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார். இதனால் பணிகள் பாதிக்கப்படுவதோடு, நோயாளிகளும் எக்ஸ்ரே பெற காத்து கிடக்க வேண்டி உள்ளது. விபத்து, அவசர கிசிச்சை நேரத்தில் எக்ஸ் ரே எடுப்பதற்கு தற்போதுள்ள ரேடியோகிராபரை வீட்டிலிருந்து அழைத்து வந்து எக்ஸ் ரே எடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கு காலதாமதம் ஏற்படுவதோடு நோயாளியும் பாதிக்கின்றனர்.மேலும், இவர் விடுமுறையில் சென்றால், வேறு ஆஸ்பத்திரியில் இருந்து ரேடியோகிரபர் வந்தால் தான் எக்ஸ் ரே எடுக்க முடியும் என்ற நிலை உள்ளது. எனவே, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆஸ்பத்திரியில் எக்ஸ் ரே பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


