தெலுங்கானா போராட்டம்: ரயில்கள் ரத்து
தெலுங்கானா போராட்டம்: ரயில்கள் ரத்து
தெலுங்கானா போராட்டம்: ரயில்கள் ரத்து
ADDED : அக் 14, 2011 09:49 AM
ஐதராபாத்: தெலுங்கானாவில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளதை தொடர்ந்து அக்டோபர் 15-17ம் தேதிகளில் 124 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வலியுறுத்தி வரும் அக்டோபர் 15 முதல் 17ம் தேதி வரை ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என தெலுங்கானா கூட்டுக்குழு அறிவித்துள்ளது. இதனையடுத்து தெலுங்கானா பகுதி வழியாக செல்லும் ரயில்கள மாற்றிமைக்கப்பட்டுள்ளன. இதன் படி 124 பயணிகள் ரயி்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 38 ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. 68 ரயில்கள் மாற்றிவிடப்பட்டுள்ளன. 19 ரயில்கள் பயண திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 8 ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என ரயில்வேத்துறை அறிவித்துள்ளது.


