ADDED : ஜூலை 17, 2011 02:13 AM
நாமக்கல்: மலைவேப்பன்குட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், காமராஜர்
பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் வருதராஜ்
தலைமை வகித்தார்.
தலைமையாசிரியர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து, காமராஜர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை
செலுத்தப்பட்டது. பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டியில்
வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.ஒன்றிய கவுன்சிலர்
ஜெகநாதன், மகாகவி கலை தமிழ்ச்சங்க நிர்வாகிகள் சுபா, ராஜேந்திரன், சபாபதி,
ஆசிரியைகள் வசுமதி, கோமதி, வித்யாபூரணி உட்பட பலர் பங்கேற்றனர்.