Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மொடச்சூர் மாட்டு சந்தையில் அடிமாடுகள் சிறைபிடிப்பு

மொடச்சூர் மாட்டு சந்தையில் அடிமாடுகள் சிறைபிடிப்பு

மொடச்சூர் மாட்டு சந்தையில் அடிமாடுகள் சிறைபிடிப்பு

மொடச்சூர் மாட்டு சந்தையில் அடிமாடுகள் சிறைபிடிப்பு

ADDED : ஜூலை 24, 2011 12:58 AM


Google News

கோபிசெட்டிபாளையம்: கோபி மொடச்சூர் மாட்டு சந்தையில் விற்கப்பட்ட அரிய வகை மாடுகளை அடிமாட்டுக்காக கேரளாவுக்கு அனுப்பக் கூடாது என, பொதுமக்கள் மாடுகளை சிறைப்பிடித்தனர்.

கோபி அருகே மொடச்சூரில் வாரந்தோறும் மாடு மற்றும் ஆட்டு சந்தை நடக்கிறது. சிறுவலூர், நம்பியூர், கடத்தூர், சத்தி, திங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாடு, ஆடுகள் அதிகளவில் கொண்டு வரப்படுகிறது. மாட்டு சந்தையில் ஜெர்ஸி, கொங்கன் இன மாடு, எருமை மாடு, கலப்பின மாடுகள், காலேஜ் இன பசு மாடுகள் விற்பனை செய்யப்படுகிறது.



ஜெர்ஸி இன மாடுகள் 15 ஆயிரம் முதல் 24 ஆயிரம் ரூபாய் வரையும், கன்று குட்டிகள் 3,000 முதல் 7,000 ரூபாய் வரையும், கலப்பின பசுமாடுகள் 10 ஆயிரம் முதல் 23 ஆயிரம் ரூபாய் வரையும், கன்று குட்டிகள் 3,000 முதல் 8,000 ரூபாய் வரையும் விற்கப்பட்டது.

கொங்கன் இன பசுகள் 15 ஆயிரம முதல் 20 ஆயிரம் ரூபாய் வரையும், கன்று குட்டிகள் 4,000 முதல் 8,000 ரூபாய் வரையும் விற்கப்பட்டது.

ஆடுகள் 1,500 முதல் 2,500 ரூபாய் வரையும், இரண்டு குட்டியுடன் கூடிய ஆடுகள் 3,000 முதல் 4,000 ரூபாய்க்கும் , குறுப்பின ஆடுகள் 1,500 முதல் 2,000 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

சந்தையில் வாங்கப்பட்ட மாடுகள், லாரியில் ஏற்றப்பட இருந்தன. மாடுகளின் உடலில் எண் குறிக்கப்பட்டவை, கேரளாவுக்கு அடிமாட்டுக்கு கொண்டு செல்வது தெரியவந்தது. அரியவகை மாடுகளை அடிமாட்டு கொண்டு செல்ல கூடாது என, இந்து முன்னணி மற்றும் மொடச்சூர் பகுதியை சேர்ந்த பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, மாடுகளை சிறை பிடித்தனர்.



அவர்கள் கூறியதாவது: குஜராத் 'கிர்', ஆந்திரா 'ஓங்கோள்' மற்றும் தமிழகத்தில் 'காங்கேயம்' இன மாடுகள் அழிந்து வருகின்றன. அரிய வகை மாடுகள் கேரளாவுக்கு அடிமாட்டுக்காக கொண்டு செல்லப்படுகிறது. அரிய வகை மாடுகளை காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாடுகளை அடிமாட்டு விற்க விடமாட்டோம். எங்கள் உயிரை கொடுத்தாவது மாடுகள் கொண்டு செல்வதை தடுப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர். மாட்டு வியாபாரிகள், சம்பவ இடத்துக்கு வந்தனர். மாடுகளை அடிமாட்டுக்காக கொண்டு செல்வதில்லை என்றும், மாட்டு உரிமையாளரிடமே திருப்பி கொடுத்து விடுவதாக உறுதி அளித்ததின் பேரில், பொது மக்கள் கலைந்து சென்றனர். சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us