/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நான்குநேரி அருகே விபத்தில் காயமடைந்த வாலிபர் பலிநான்குநேரி அருகே விபத்தில் காயமடைந்த வாலிபர் பலி
நான்குநேரி அருகே விபத்தில் காயமடைந்த வாலிபர் பலி
நான்குநேரி அருகே விபத்தில் காயமடைந்த வாலிபர் பலி
நான்குநேரி அருகே விபத்தில் காயமடைந்த வாலிபர் பலி
ADDED : ஜூலை 28, 2011 01:52 AM
திருநெல்வேலி : நான்குநேரி அருகே ரோடு விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் பாளை.
ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் இறந்தார்.நெல்லை அருகே கண்டியப்பேரியை சேர்ந்த ஆறுமுகம் மகன் செந்தில்வேல்(25). அதே ஊரை சேர்ந்தவர் உச்சிமாகாளி(17). இருவரும் கட்டடத்தொழிலாளிகள்.கடந்த 22ம்தேதி நான்குநேரி அருகே வாகைக்குளத்திற்கு தென்புறம் இருவரும் மோட்டார்பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ரோட்டோர திண்டில் பைக் மோதியது. இருவரும் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தனர். செந்தில்வேல் அதே இடத்தில் இறந்தார். படுகாயமடைந்த உச்சிமாகாளி பாளை. ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். நேற்று அவர் இறந்தார். விபத்து குறித்து நான்குநேரி போலீசார் விசாரிக்கின்றனர்.


