/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/போலீஸ் நண்பர்கள் குழுவில் பணியாற்ற சீனியர் எஸ்.பி., அழைப்புபோலீஸ் நண்பர்கள் குழுவில் பணியாற்ற சீனியர் எஸ்.பி., அழைப்பு
போலீஸ் நண்பர்கள் குழுவில் பணியாற்ற சீனியர் எஸ்.பி., அழைப்பு
போலீஸ் நண்பர்கள் குழுவில் பணியாற்ற சீனியர் எஸ்.பி., அழைப்பு
போலீஸ் நண்பர்கள் குழுவில் பணியாற்ற சீனியர் எஸ்.பி., அழைப்பு
ADDED : ஆக 03, 2011 01:25 AM
புதுச்சேரி : போலீஸ் நண்பர்கள் குழுவில் சேர்ந்து பணியாற்ற விருப்பம் உள்ள இளைஞர்கள், அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் பதிவு செய்து கொள்ளலாம் என, சீனியர் எஸ்.பி., சந்திரன் கூறினார்.
அவர் நேற்று கூறியதாவது: புதுச்சேரியில் குற்றங்களைத் தடுக்கும் பணியில் போலீசார் துரிதமாகவும் சிறப்பாகவும் பணியாற்றி வருகின்றனர். குற்றங்கள் குறித்து பொது மக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்கள் மட்டுமின்றி, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்கலாம். இதன் மூலம் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும். போலீஸ் நண்பர்கள் குழுவில் சேர்ந்து பணியாற்ற விருப்பம் உள்ள இளைஞர்கள், அந்தந்த போலீஸ் நிலையங்களுக்குச் சென்று, தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம். இக்குழுவில் சேர முன்வரும் இளைஞர்களின் நடத்தை உள்ளிட்ட முழு விபரமும் ஆராய்ந்து, அதன்பிறகே போலீஸ் நண்பர்கள் குழுவில் சேர்க்கப்படுவர். இவ்வாறு சீனியர் எஸ்.பி., சந்திரன் கூறினார்.