Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கருணாநிதி, ஸ்டாலின் மன வருத்தம்

கருணாநிதி, ஸ்டாலின் மன வருத்தம்

கருணாநிதி, ஸ்டாலின் மன வருத்தம்

கருணாநிதி, ஸ்டாலின் மன வருத்தம்

ADDED : ஆக 13, 2011 01:26 AM


Google News

சுவிஸ் வங்கியில் முதலீடு செய்ததாக ஆக., 9ம் தேதி தினமலர் நாளிதழில் வெளியான பட்டியல், தங்கள் மீதான அதிருப்தியில் வெளியிடப்பட்ட தகவல் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதியும், முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலினும் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

ஈரோடு பகுதியில், 'விக்கிலீக்ஸ்' அளித்த தகவல் என்ற பெயரில் வெளியான பரபரப்பு நோட்டீஸ் வெளியானது. அதில் குறிப்பிடப்பட்ட தகவல்கள், தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சியினர் குறித்ததாக இருப்பதாக செய்தி வெளியானது. பெரும் பரபரப்புடன் செய்திகளை வெளியிடும் காலகட்டமாக தற்போது உலக நடப்புகள் அமைந்திருக்கின்றன. ஆனால், பத்திரிகைகளுக்கான சட்ட திட்டங்கள் மட்டும் அப்படியே தொடர்கின்றன. அதேபோல, அரசின் முக்கியப் பொறுப்பில் இருந்த பலரும் மீடியாவை தங்கள் மனத்திற்கேற்ப, ஜனநாயக விரோத வார்த்தைகளில் விமர்சித்து கண்டிப்பதும், அது சில ஊடகங்களில் தொடர்ந்து வெளிவருவதும் வழக்கமாகி வருகிறது.



'சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல்' என்ற தலைப்பில், 'தினமலர்' நாளிதழில் வெளியான செய்தி, சிறிதும் உள்நோக்கமில்லாத செய்தியாகும். எவரையும் கறைபடுத்தும் நினைப்பும், 'தினமலர்' நாளிதழுக்கு கிடையாது. 'விக்கிலீக்ஸ்' தகவல் என்பது, ஈரோடு வரை பரவி, பரபரப்பை ஏற்படுத்தியதால், இது வெளிவந்திருக்கிறதே தவிர, தனிப்பட்ட விமர்சனமாகாது. இருந்த போதும், முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின், இச்செய்தியால், மனம் வருத்தமுற்று இருப்பதாக தெரிவித்திருப்பதால், தினமலர் நாளிதழில், இச்செய்தி வெளியானதற்கு வருந்துகிறோம்.



-ஆசிரியர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us