Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கார் மோதிசைக்கிளில் சென்றவர் பலி

கார் மோதிசைக்கிளில் சென்றவர் பலி

கார் மோதிசைக்கிளில் சென்றவர் பலி

கார் மோதிசைக்கிளில் சென்றவர் பலி

ADDED : செப் 07, 2011 02:29 AM


Google News
கோவில்பட்டி:கோவில்பட்டியில் கார் மோதி சைக்கிளில் சென்றவர் பலியானார்.இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது, கோவில்பட்டி அருகேயுள்ள மூப்பன்பட்டி கிழக்குத்தெருவை சேர்ந்த சங்கையா மகன் மாரியப்பன்(58).

இவர் வாட்ச்மேன் வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் இரவு சைக்கிளில் மூப்பன்பட்டி காலனி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது நெல்லை-மதுரை பைபாஸ் ரோட்டில் சென்ற கார் மாரியப்பன் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆன õல் அவர் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகன் ரமேஷ்(31) கோவில்பட்டி கிழக்கு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us