ADDED : செப் 07, 2011 10:21 PM
சங்கராபுரம்:சங்கராபுரத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மலேரியா, காலரா
நோய் தடுப்பு பயிற்சி முகாம் நடந்தது.சங்கராபுரம் ஒன்றிய அலுவலக
வளாகத்தில் நடந்த பயிற்சி முகாமிற்கு புதுப்பேட்டை சுகாதார நிலைய மருத்துவ
அலுவலர் செந்தமிழ்செல்வி தலைமை தாங்கினார்.
பி.டி.ஓ., மணவாளன் முன்னிலை
வகித்தார். காலரா, வயிற்று போக்கு, கொசுவை ஒழித்தல், குடிநீரில்
குளோரினேஷன் செய்வது பற்றி சுகாதார மேற்பார்வையாளர் பெருமாள், சுகாதார
ஆய்வாளர் சரவணன் விளக்கினர்.முகாமில் சுகாதார ஆய்வாளர்கள் வள்ளி, கலையரசி,
சிவகாமி மற்றும் ஊராட்சி தலைவர்கள், குடிநீர் தொட்டி ஆபரேட்டர்கள் கலந்து
கொண்டனர்.


