அயர்லாந்தில் அசத்திய சல்மான் - கட்ரீனா ஜோடி
அயர்லாந்தில் அசத்திய சல்மான் - கட்ரீனா ஜோடி
அயர்லாந்தில் அசத்திய சல்மான் - கட்ரீனா ஜோடி
ADDED : செப் 30, 2011 12:32 PM

சல்மான் கானும்,நடிகை கட்ரீனா கைபும் அயர்லாந்தில் நடந்த ஏக் தா டைகர் படத்தின் சூட்டிங்கின் போது மிகவும் நெருக்கமாக காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் அறுவை சிகிச்சை முடித்துக் கொண்ட சல்மான் கான், வலியையும் பொருட்படுத்தாது யாஷ்ராஜ் பில்ம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ஏக் தா டைகர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
ஏக் தா டைகர் படத்தின் நாயகி கட்ரீனா கைப். சல்மானுக்கும் கட்ரீனாவுக்கும் இடையேயான காதலில் விரிசல் ஏற்பட்டு இருவரும் சிறிது காலம் ஒருவரையொருவர் சந்திக்காமல் இருந்தனர். இந்நிலையில் சல்மான் கானுக்கு ஆபரேஷன் என்றவுடன் பதறிப்போன கட்ரீனா, அவர் உடல் நலன் சரியாக வேண்டும் என தான் பிரார்த்தனை செய்வதாக கூறியிருந்தார்.
அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வந்த சல்மான் கானும் பாடிகார்ட் திரைப்படத்தின் வெற்றி பற்றி அறிக்கை அளித்த போது ; நிஜ வாழ்க்கையில் கட்ரீனா கைப் எனது பாடிகார்டாக வர வேண்டும் என விரும்புகிறேன் என பகிரங்கமாக கூறியிருந்தார்.இந்நிலையில் அயர்லாந்தில் நடந்த சூட்டிங்கின் போது இருவரும் மிகவும் நெருக்கமாகவும், சந்தோஷமாகவும் காணப்பட்டதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.


