/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/அலுமினிய கம்பி திருடிய வாலிபர் கைதுஅலுமினிய கம்பி திருடிய வாலிபர் கைது
அலுமினிய கம்பி திருடிய வாலிபர் கைது
அலுமினிய கம்பி திருடிய வாலிபர் கைது
அலுமினிய கம்பி திருடிய வாலிபர் கைது
ADDED : அக் 05, 2011 12:50 AM
காஞ்சிபுரம் : தனியார் கம்பெனியில் அலுமினிய பொருட்களை திருடிய வாலிபரைப் போலீசார் கைது செய்தனர்.
சென்னை பங்களா தெருவைச் சேர்ந்தவர் நடராஜன்.
இவரது மகன் மணிகண்டன், 24. லோடுமேன். நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனிக்கு, லாரியில் பொருட்களை ஏற்றிவரச் சென்றார். பொருட்களை ஏற்றியபின், கம்பெனியிலிருந்த அலுமினிய கம்பிகள், மற்றும் பிளாஸ்டிக் பொருட்களையும், திருடி லாரியில் ஏற்றிச் சென்றார். இதகுறித்து கம்பெனி மேலாளர் பிரபாகரன், ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.


