Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/பெற்ற குழந்தையை கொன்று இளம்பெண் தற்கொலை

பெற்ற குழந்தையை கொன்று இளம்பெண் தற்கொலை

பெற்ற குழந்தையை கொன்று இளம்பெண் தற்கொலை

பெற்ற குழந்தையை கொன்று இளம்பெண் தற்கொலை

ADDED : அக் 07, 2011 02:17 AM


Google News

தூத்துக்குடி : தூத்துக்குடியில் வறுமையின் காரணமாக தான் பெற்றெடுத்த குழந்தைக்கு தன் கையால் சங்கில் விஷம் மருந்து கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் அதே விஷம் மருந்தினை அருந்தி அப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது, தூத்துக்குடி தாளமுத்துநகர் சிலுவைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர் டைல்ஸ் பதிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 4 குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் வேலைக்கு சென்ற இடத்தில் மாலதி என்ற பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இவரை முருகன் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் மாலதிக்கு பாலதண்டாயுதம்(3) மற்றும் ஐஸ்வர்யா 1 1/2 ஆகிய இருகுழந்தைகள் உள்ளனர். மாலதி ஓரளவு பணம் கொடுத்து உதவி செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக முற்றிலும் செலவுக்கு பணம் கொடுக்காமல் நிறுத்திவிட்டார். இதனால் 2 குழந்தைகளையும் வளர்க்க கஷ்டப்பட்ட மாலதி மீண்டும் கூலி வேலைக்கு சென்றுவந்தார். இந்நிலையில் மாலதி மகள் ஐஸ்வர்யாவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் குழந்தையை கவனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஐஸ்வர்யாவை ஆஸ்பத்திரிக்கு கூட்டி செல்வதற்கு பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்துள்ளார். கணவர் முருகனிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அவரும் கைவிரித்து விட்டார். அதனால் குழந்தையையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள மாலதி முடிவு செய்துள்ளார். இதனையடுத்து நேற்று முன்தினம் விஷ மருந்து வாங்கியுள்ளார். பின்னர் வீட்டுக்கு வந்து விஷத்தை தண்ணீரை கலந்து அதனை ஒரு சங்கில் ஊற்றி குழந்தை ஐஸ்வர்யாவுக்கு கொடுத்துள்ளார். மீதமுள்ள விஷத்தை மாலதி அருந்தியுள்ளார்.இந்நிலையில் நேற்று காலையில் வெகுநேரம் வரையும் மாலதி வீடு உட்புறமாக பூட்டியே இருந்ததால் சந்தேகப்பட்ட அவரது உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் பலரும் கதவை திறந்து பார்த்தப்போது அங்கு இருவரும் வாயில் நுரைதள்ளிய நிலையில் இறந்து கிடந்தனர். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர் தனிப்பிரிவு ஏட்டு ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us