/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஒற்றுமையாக வெற்றிக்கு பாடுபட வேண்டும்ஒற்றுமையாக வெற்றிக்கு பாடுபட வேண்டும்
ஒற்றுமையாக வெற்றிக்கு பாடுபட வேண்டும்
ஒற்றுமையாக வெற்றிக்கு பாடுபட வேண்டும்
ஒற்றுமையாக வெற்றிக்கு பாடுபட வேண்டும்
ADDED : அக் 08, 2011 10:58 PM
திருப்பூர் : கருத்து வேறுபாடுகளை மறந்து, அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி, கட்சியின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என, அமைச்சர் வேலுமணி பேசினார்.திருப்பூர் மாநகராட்சியில், அ.தி.மு.க., சார்பில் மேயர் வேட்பாளர் விசாலாட்சியும், 60 கவுன்சிலர் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்; ஊரக தொழில்துறை அமைச்சர் சண்முகவேலு தலைமையில், ஏழு பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டது; தொழில்துறை அமைச்சர் வேலுமணி, தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் சண்முகவேலு தலைமையில் தேர்தல் ஆலோசனை கூட்டம், திருப்பூரில் நேற்று நடந்தது.அமைச்சர் வேலுமணி பேசியதாவது:திருப்பூர் மாநகராட்சியில் கவுன்சிலருக்கு போட்டியிடும் 60 வேட்பாளர்களும், மேயர் வேட்பாளரும் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும். கவுன்சிலர் வேட்பாளர்கள், மேயர் வேட்பாளர் பெயருடன் சேர்த்து நோட்டீஸ் அச்சடித்து வினியோகிக்க வேண்டும்; மேயர் வேட்பாளருக்கும் சேர்த்து ஓட்டு சேகரிக்க வேண்டும்.ஒரு சில வார்டுகளில் 10 பேர் வரை போட்டியிட வாய்ப்பு கேட்டனர். அவர்களில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு தரப்பட்டுள்ளது; வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்கள், விருப்ப மனுதாக்கல் செய்திருந்தவர்களை சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும். கட்சியின் வெற்றிக்காக, அவர்களிடம் காலில் விழுந்து ஆதரவு கேட்கவும் தயங்கக் கூடாது. போட்டி வேட்பாளர்களை அலட்சியப்படுத்தவும் கூடாது.உள்ளாட்சி தேர்தலில், ஒவ்வொரு ஓட்டையும் உயர்வாக மதிக்க வேண்டும்; யாரையும் குறைவாக மதிப்பிட கூடாது. கருத்து வேறுபாடுகளை மறந்து, அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி, கட்சியின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.இவ்வாறு, அமைச்சர் வேலுமணி பேசினார்.எம்.பி., சிவசாமி, எம்.எல்.ஏ., ஆனந்தன், மேயர் வேட்பாளர் விசாலாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


