/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தர்மாபுரி குளம் தூர்வாராததால் குடிநீர் மாசடையும் அபாயம்தர்மாபுரி குளம் தூர்வாராததால் குடிநீர் மாசடையும் அபாயம்
தர்மாபுரி குளம் தூர்வாராததால் குடிநீர் மாசடையும் அபாயம்
தர்மாபுரி குளம் தூர்வாராததால் குடிநீர் மாசடையும் அபாயம்
தர்மாபுரி குளம் தூர்வாராததால் குடிநீர் மாசடையும் அபாயம்
ADDED : அக் 09, 2011 12:29 AM
புதுச்சேரி : தர்மாபுரியில் உள்ள குளம் தூர் வாரப்படாததால், தண்ணீர் மாசடைந்துள்ளது.
தர்மாபுரி திரவுபதியம்மன் கோவில் தெருவில் உள்ள குளத்தின் பின்புறம் பிரெஞ்சு காலத்தில் கட்டப்பட்ட பம்ப் ஹவுஸ் உள்ளது. இங்கிருந்துதான் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. ஆனால் இக்குளம் தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கித் தவிக்கிறது. குளத்தைச் சுற்றி புதர் மண்டி கிடப்பதால், குப்பைகள் கொட்டும் இடமாக மாறிவிட்டது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், குளத்தில் கழிவு நீர் கலக்கிறது. இக்குளம் முழுவதும் ஆகாயத் தாமரை படர்ந்துள்ளதால், நீர் மாசடைந்துள்ளது. குளத்தின் அருகில் குடிநீர் பம்ப் ஹவுஸ் உள்ளதால், குடிநீர் மாசடையும் அபாயம் உள்ளது. எனவே குளத்தை சீரமைக்க அர” நடவடிக்கை எடுக்க வேண்டும்.


