/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அரசு மருத்துவமனையில் தே.மு.தி.க.,வினர் சுகாதார பணிஅரசு மருத்துவமனையில் தே.மு.தி.க.,வினர் சுகாதார பணி
அரசு மருத்துவமனையில் தே.மு.தி.க.,வினர் சுகாதார பணி
அரசு மருத்துவமனையில் தே.மு.தி.க.,வினர் சுகாதார பணி
அரசு மருத்துவமனையில் தே.மு.தி.க.,வினர் சுகாதார பணி
ADDED : செப் 08, 2011 01:52 AM
கோவை : அரசு மருத்துவமனை வளாகத்தை தே.மு.தி.க., கட்சியினர், சுத்தம் செய்தனர்.
இப்பணியில் 170 தொண்டர்கள் ஈடுபட்டனர்.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை, கட்சியினர் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடி வருகின்றனர். இதை முன்னிட்டு கோவை மாநகரில் ஆக.,21 முதல் நலத்திட்ட பணிகளை செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக அரசு மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். பிரசவம், அறுவை சிகிச்சை, குழந்தைகள் நலம், எய்ட்ஸ் கட்டுப்பாடு உள்ளிட்ட வார்டுகளின் பின்புறம் மற்றும் மருத்துவமனை வளாகத்தில் ஆங்காங்கே தேங்கிக் கிடந்த குப்பைகளை அகற்றினர். சேகரித்த குப்பைகளை ஐந்து மாநகராட்சி லாரிகளின் மூலம் அப்புறப்படுத்தினர். வார்டுகளை தண்ணீர் ஊற்றி சுத்தப்படுத்தினர். கோவை மாநகர் மாவட்ட செயலாளர் தமிழ் முருகன், மாநில கைத்தறி பிரிவு செயலாளர் விஜய் ஈஸ்வரன், அவைத்தலைவர் தங்கவேலு, பொருளாளர் கேசவன் உட்பட 170 பேர் பங்கேற்றனர்.


