ADDED : ஆக 12, 2011 11:39 PM
ஊட்டி : மா.கம்யூ., சார்பில் வரும் 25ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படுகிறது.மா.கம்யூ., மாவட்ட செயலாளர் பத்ரி வெளியிட்டுள்ள அறிக்கை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மா.கம்யூ., தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், நீலகிரி மாவட்ட குழுக்கள் இணைந்து வரும் 25ம் தேதி ஊட்டியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கை முழக்க போராட்டம் நடத்தப்படுகிறது.
போராட்டத்துக்கு மா.கம்யூ., கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கலந்து கொண்டு பேசுகிறார். இக்கோரிக்கைகளை விளக்குவதற்காக மாவட்டம் முழுவதும் வரும் 23, 24, 25 ஆகிய தேதிகளில் வாகன பிரசார இயக்கம் நடத்தப்படுகிறது. இவ்வாறு பத்ரி கூறியுள்ளார்.


