/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கிராவல் மண் கிடைக்காததால் கள்ளக்குறிச்சி கோர்ட் கட்டட பணிகள் தாமதம்கிராவல் மண் கிடைக்காததால் கள்ளக்குறிச்சி கோர்ட் கட்டட பணிகள் தாமதம்
கிராவல் மண் கிடைக்காததால் கள்ளக்குறிச்சி கோர்ட் கட்டட பணிகள் தாமதம்
கிராவல் மண் கிடைக்காததால் கள்ளக்குறிச்சி கோர்ட் கட்டட பணிகள் தாமதம்
கிராவல் மண் கிடைக்காததால் கள்ளக்குறிச்சி கோர்ட் கட்டட பணிகள் தாமதம்
ADDED : ஆக 09, 2011 02:43 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டட பணிகளுக்கு தேவையான கிராவல் மண் கிடைக்காததால், பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சியில் 2.40 ஏக்கர் பரப்பளவு கொண்ட பழைய கோர்ட் வளாகத்தில் ஏழு கோடியே 54 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் தரை தளத்தில் சார்பு நீதிமன்றம், விரைவு நீதிமன்றம், முதலாவது கூடுதல் மாவட்ட உரிமையில் நீதிமன்றம், நீதித்துறை நடுவர் நீதிமன்றமும் அமைக்கப்படுகிறது.முதலாவது தளத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், இரண்டாவது கூடுதல் மாவட்ட உரிமையில் நீதிமன்றம், மூன்றாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதி மன்றமும் அமைக்கப்படுகின்றது.மேலும் வாகனங்கள் நிறுத்துவதற்கு தனியாக வாகன கொட்டகைகள், சார்பு நீதிபதி மற்றும் கூடுதல் மாவட்ட முன்சிப்களுக்குரிய வாகனங்கள் நிறுத்துவற்கான கட்டடம், ஜெனரேட்டர் அறை அமைக்கப்படுகிறது. மாவட்டத்தில் முதன்முறையாக நீதிபதிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக தனித் தனியாக நான்கு 'லிப்ட்' வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் கான்கிரீட் பில்லர் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முழு வீச்சில் நடந்து வந்தது. இதனையடுத்து 'பேஸ் மட்டம்' பணிகள் முடிந்தவுடன், அதில் கிராவல் மண் கொட்டி நிரப்ப வேண்டும். இதற்காக கடந்த ஜூன் 22ம் தேதி ஒப்பந்ததாரர் தரப்பில் கள்ளக்குறிச்சி மற்றும் சங்கராபுரம் தாசில்தார், ஆர்.டி.ஓ., கணிம வளத்துறையினர், கலெக்டர் உள்ளிட்டோரிடம் கிராவல் மண் எடுத்துக் கொள்வதற்கு தபால் மூலம் அனுமதி கேட்டுள்ளனர். இதுவரை கிராவல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்படாததால் 'ரூப் காலம்' அமைக்க முடியாமல் பணிகள் பாதிப்படைந்துள்ளது.ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் பேஸ் மட்ட பணிகளுக்கு 600 யூனிட் கிராவல் மண் தேவைபடுகிறது. கிராவல் மண் எடுக்க அனுமதி கிடைக்காததால் கட்டட பணிகள் மந்தமாக நடந்து வருகிறது.


