ADDED : ஆக 03, 2011 11:26 PM
காரியாபட்டி : காரியாபட்டியில் மிகவும் பிரதான ரோடாக கள்ளிக்குடி ரோடு உள்ளது.
இலுப்பகுளம், வேப்பங்குளம், மருதங்குடி, மொச்சிகுளம், வெள்ளாகுளம், வையம்பட்டி போன்ற ஊர்களுக்கும், நான்கு வழிச்சாலையில் செல்வதற்கும் இந்த ரோட்டை பயன்படுத்துகின்றனர். காலையில் மல்லிகைப் பூ கொண்டு செல்பவர்கள் அதிவேகத்தில் வருவதால், வாக்கிங் செல்பவர்களும், பள்ளி மாணவர்கள், அரசு ஆஸ்பத்திரிக்கு நடந்து செல்வோர் பீதியில் செல்கின்றனர். டூ வீலரில் செல்பவர்கள் கீழே விழுந்து காயம் ஏற்படுவதுடன், நடந்து செல்பவர்களும் பாதிப்பதால், இப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, அதிவேகத்தில் வருபவர்கள் மீது கடும் எடுக்க வேண்டும்.


