ADDED : ஆக 09, 2011 02:49 AM
கோவை : அறிவியல், கணித துறைகளில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள் குறித்த தேசிய கருத்தரங்கு, கோவை வி.எல்.பி., ஜானகியம்மாள் பொறியியல் கல்லூரியின் அறிவியல் மற்றும் மனிதவள மேம்பாட்டு துறையின் சார்பில்,கல்லூரியில் நடந்தது.'அறிவியல் சார்ந்த அளவீடு மற்றும் பயன் பாட்டு கணிதவியல்' எனும் தலைப்பிலான இக்கருத்தரங்கிற்கு, கல்லூரி முதல்வர் சவுந்தர ராஜன் தலைமை வகித்தார்.
பெங்களூரு சி.எஸ். ஐ.ஆர்., கல்வி நிறுவன முதல்வர் கோபால கிருஷ்ண பாட்ரா, கருத்தரங்கினை துவக்கி வைத்தார்.கருத்தரங்கிற்கு அனுப்பிய 60 ஆராய்ச்சி கட்டுரைகளில், 40 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டன. நவீன காலத்தில் கணிதத்தின் பயன்பாடு, சமீபகாலமாய் கணிதத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், அறிவியல் சார்ந்த அளவீடு பற்றிய தகவல் அளிக்கப்பட்டது. கருத்தரங்கின் மூலம் ஆராய்ச்சி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தகவல் கிடைத்தது. கருத்தரங்கு நடத்த டில்லி ஏ.ஐ.சி.டி.இ., நிறுவனம், அறிவியல் மற்றும் மனிதவள மேம்பாட்டு துறைக்கு ஒரு லட்ச ரூபாய் அளித்துள்ளது.சென்னை ஐ.ஐ.டி., விரிவுரையாளர் ராமா, துணை விரிவுரையாளர் பார்த்தசாரதி மேண்டல், வி.எல்.பி., கல்லூரி மனிதவள துறைத்தலைவர் பழனியம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


