/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/வெடித்து சிதறிய மின் பிரேக்கர்: இரவு-பகலாக சீரமைப்புவெடித்து சிதறிய மின் பிரேக்கர்: இரவு-பகலாக சீரமைப்பு
வெடித்து சிதறிய மின் பிரேக்கர்: இரவு-பகலாக சீரமைப்பு
வெடித்து சிதறிய மின் பிரேக்கர்: இரவு-பகலாக சீரமைப்பு
வெடித்து சிதறிய மின் பிரேக்கர்: இரவு-பகலாக சீரமைப்பு
ADDED : ஆக 02, 2011 01:01 AM
செஞ்சி : செஞ்சி துணை மின் நிலையத்தில் மின்னல் தாக்குதலால் வெடித்து
சிதறிய பிரேக்கரை மின் வாரிய ஊழியர்கள் இரவு, பகலாக சரி செய்தனர்.செஞ்சி
துணை மின் நிலையத்தில் இருந்து செஞ்சி நகரம், சிறுனாம்பூண்டி, மணியம்பட்டு,
பெருங்காப்பூர், தொரப்பாடி, களையூர், நாட்டார்மங்கலம் ஆகிய பகுதிகளுக்கு
மின்சாரம் கொண்டு செல்லும் பிரதான பிரேக்கர் உள்ளது.
இந்த பிரேக்கர், கடந்த
30ம் தேதி இரவு 10.20 மணிக்கு மின்னல் தாக்கியதால் திடீரென வெடித்து
சிதறியது.இதனால் செஞ்சி நகரம் உட்பட பல பகுதிகள் இருளில் மூழ்கியது.
இதையடுத்து தாயனூர் துணை மின் நிலையத்தில் இருந்து இரவோடு இரவாக வழியில்
உள்ள மின் இணைப்புகளை மாற்றி அதிகாலை 3 மணிக்கு செஞ்சி நகருக்கு மின்சப்ளை
வழங்கினர்.இதிலும் பாற்றாக்குறை ஏற்பட்டதால் நேற்று முன்தினம் மாலை 4.30
மணி முதல் செஞ்சி நகரில் மீண்டும் மின் நிறுத்தம் ஏற்பட்டது. இதை
நிரந்தரமாக சரி செய்ய தேவையான பிரேக்கர் செஞ்சி துணை மின் நிலையத்தில்
இருப்பு இல்லை. மின் வாரிய அதிகாரிகளின் சிறப்பு உத்தரவின் பேரில்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் துணை மின் நிலையத்தில் இருந்து புதிய
பிரேக்கரை கொண்டு வந்தனர்.செயற்பொறியாளர் சிவானந்தம், உதவி
செயற்பொறியாளர்கள் ஜெயசீலன், ராகவன், முருகன், உமர் மேற்பார்வையில்
விழுப்புரம் சிறப்பு பராமரிப்பு குழுவினரும், செஞ்சி மின் வாரிய
ஊழியர்களும் கிரேன் உதவியோடு பிரேக்கரை பொருத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இரவு 10 மணிக்கு இப்பணிகள் முடிந்து மின்சப்ளை வழங்கப்பட்டது.இதன் மூலம்
செஞ்சி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக இருந்து வந்த மின் வெட்டு
பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டது.