சமத்துவ மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம்
சமத்துவ மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம்
சமத்துவ மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூலை 27, 2011 01:27 AM
நாமக்கல்: நாமக்கல்லில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அய்யாவு, மாநில தொழிற்சங்க போக்குவரத்து துணை அமைப்பாளர் முத்துசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயலாளர் சுரேஷ்காந்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தலையொட்டி கட்சியின் கட்டமைப்பு பலப்படுத்தும் விதமாக உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட மாணவரணிச் செயலாளர் முரளிதரன், மாவட்ட துணைச் செயலாளர் சதாசிவம் உட்பட பலர் பங்கேற்றனர்.