தசை நார் தேய்வு குழந்தைகளுக்கான பள்ளி
தசை நார் தேய்வு குழந்தைகளுக்கான பள்ளி
தசை நார் தேய்வு குழந்தைகளுக்கான பள்ளி
ADDED : ஜூலை 12, 2011 06:02 PM

சென்னை: குழந்தைகளுக்கான தசைநார் தேய்வு குறித்த மையங்களைக் கூடுதலாக திறக்க சென்னை மாநாகராட்சி முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே இத்தகைய மையம் மாநகராட்சியால் நடத்தப்பட்டு வருகிறது. குழந்தைகள் நல டாக்டர் வி.வைத்தியநாதன் மேற்பார்வையில் நடைபெறும் இந்த மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நோய் தாக்கியவர்களால் நடக்கவோ நிற்கவே இயலாது. இத்தகைய குழந்தைகளைப் பராமரிக்க தேவையான வசதிகளை இந்த மையம் வழங்குகிறது. இத்தயை குழந்தைகள் மற்றவர்களைப் போல் பள்ளிகளுக்குச் சென்று கற்க இந்த மையம் உதவுகிறது. தற்போது இந்த மையத்தில் 40 குழந்தைகள் படித்து வருகின்றனர். இது குறித்து மேயர் சுப்ரமணியம் கூறுகையில், இந்த மையத்திற்கு குழந்தைகளை நகரின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து அழைத்து வருவது சிரமமாக உள்ளதால் மேலும் இரண்டு பள்ளிகளைத் திறக்க இருப்பதாக தெரிவித்தார்.


