/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சுமை தூக்கும் சங்கம் மீது தொழிலாளர்கள் புகார்சுமை தூக்கும் சங்கம் மீது தொழிலாளர்கள் புகார்
சுமை தூக்கும் சங்கம் மீது தொழிலாளர்கள் புகார்
சுமை தூக்கும் சங்கம் மீது தொழிலாளர்கள் புகார்
சுமை தூக்கும் சங்கம் மீது தொழிலாளர்கள் புகார்
ADDED : ஜூலை 12, 2011 12:47 AM
ஈரோடு: ஈரோடு ரயில்வே குட்ஷெட் சுமை தூக்கும் சங்க உறுப்பினர், கலெக்டர் ஆனந்தகுமாரிடம், குடும்பத்துடன் மனு கொடுத்தனர்.
மனுவில் கூறியதாவது: ஈரோடு ரயில்வே குட்ஷெட் பாரம் சுமக்கும் தொழிலாளர்கள் சங்கத்தில் 215 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பல்வேறு பொருட்களை ஏற்றி அனுப்ப கூலி பெறுவர். சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தில் உறுப்பினராக சேர 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செலுத்த வேண்டும். திடீரென 2010 அக்டோபரில் அனைவரையும் வேலையில் இருந்து நீக்கி விட்டனர். தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் அல்லது உறுப்பினராக சேர தாங்கள் செலுத்திய 50 ஆயிரம் ரூபாயை திருப்பி தர வேண்டும். போலீஸார் மூலம் விசாரணை நடத்தி பணத்தை பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


