Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மாநகராட்சியில் ரூ. 20 கோடியில் திட்டப்பணி :உள்ளாட்சி தேர்தலை கருதி தீர்மானம்

மாநகராட்சியில் ரூ. 20 கோடியில் திட்டப்பணி :உள்ளாட்சி தேர்தலை கருதி தீர்மானம்

மாநகராட்சியில் ரூ. 20 கோடியில் திட்டப்பணி :உள்ளாட்சி தேர்தலை கருதி தீர்மானம்

மாநகராட்சியில் ரூ. 20 கோடியில் திட்டப்பணி :உள்ளாட்சி தேர்தலை கருதி தீர்மானம்

ADDED : செப் 06, 2011 01:43 AM


Google News
ஈரோடு: உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு, 20 கோடி ரூபாய் செலவில் சாலை மேம்பாடு, குடிநீர் வழங்கல் பணிகளை மேற்கொள்ள ஈரோடு மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஈரோடு மாநகராட்சி கூட்டம் துணை மேயர் பாபு வெங்கடாசலம் தலைமையில் நடந்தது. ஈரோடு மாநகராட்சி உயர் அலுவலர்கள் மற்றும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டிருக்கும் வெளிப்புற பணியாளர்களுக்கு இடையே தகவல் பரிமாறிக்கொள்ள ஏதுவாக 30 வயர்லெஸ் வாங்க 4.5 லட்சம் ரூபாய் அனுமதிக்கப்பட்டது. பஸ் ஸ்டாண்டில் கட்டப்பட்டுள்ள தரைத்தள, டூவிலர் ஸ்டாண்டை ஏலம் விட அனுமதிக்கப்பட்டது. பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முழுமையாக முடிக்கப்பட்ட பகுதியில் ரோடு மேம்பாடு செய்யப்படுகிறது. இதன்படி, பெரியார் நகர் 80 அடி சாலை உள்பட மூன்று வீதிகள் மற்றும் காந்திநகர் மூன்றாவது வீதி மேம்படுத்த 74 லட்சம் ரூபாய், பெரியண்ண வீதி மற்றும் பவுர்ஹவுஸ் ரோட்டுக்கு 74.5 லட்சம் ரூபாய், என்.ஜி.ஜி.ஓ., காலனி ஏழாவது வீதி மற்றும் அருண் வீதி 1, 2ல் சாலை அமைக்க 55 லட்சம் ரூபாய், கே.என்.கே., ரோடு 55 லட்சம் ரூபாய், சின்னமுத்து வீதி 46 லட்சம் ரூபாய், 16வது வார்டு மஜீத் வீதி 50 லட்சம், பெரியார் நகர் கருப்பண்ணசாமி வீதி 45 லட்சம், காவேரி சாலை 25 லட்சம், கிருஷ்ணம்பாளையம் சாலை 25 லட்சம் ரூபாயில் மேம்படுத்த முடிவானது. இத்திட்ட நிதியை அரசிடம் இருந்து மானியமாக பெறவும், மானியத்துக்கு மிகும் தொகையை பொது நிதியில் இருந்து ஈடுசெய்ய அனுமதிக்கப்பட்டது. மாநகராட்சியின் எல்லை விரிவுபடுவதால், இணையும் பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகம், தெரு விளக்குகள் மற்றும் உதிரி பாகங்கள், திடக்கழிவு மேலாண்மை மூலம் குப்பை, கழிவுநீர் அகற்ற டிராக்டர், இயந்திர கருவிகள், குப்பை தொட்டி வாங்க 15 கோடியே 83 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் உத்ததேச செலவீனமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்தொகையை அரசு மானியமாக பெற மன்றம் அனுமதித்தது. ஈரோடு மாநகாட்சியை நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டதை அங்கீகரித்தல் உள்ளிட்ட ஏழு தீர்மானங்கள் நேற்றைய அவசர கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. டூவீலர் ஸ்டாண்டு ஏலம், வயர்லஸ் வாங்குதல் ஆகியவை தவிர, மற்ற ஐந்து தீர்மானங்களும் மக்கள் நலனை கருத்தில்கொண்டு நிறைவேற்றப்பட்டன என்பதை விட, உள்ளாட்சி தேர்தலுக்காக மக்களிடம் பெயர் வாங்குவதற்கான முயற்சியாகவே உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us