ஓசூரில் அண்ணாதுரை பிறந்த நாள் விழா
ஓசூரில் அண்ணாதுரை பிறந்த நாள் விழா
ஓசூரில் அண்ணாதுரை பிறந்த நாள் விழா
ADDED : செப் 16, 2011 12:05 AM
ஓசூர்: ஓசூரில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., சார்பில் அண்ணாதுரை பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
ஓசூர் நகர தி.மு.க., செயலாளர் விஜயகுமார் தலைமையில் தி.மு.க., வினர் தாசில்தார் அலுவலகம் முன் உள்ள அண்ணாத்துரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்பின் ஊர்வலமாக சென்று ராம்நகர் அண்ணாத்துரை சிலைக்கு மாலை அணிவித்தனர். நகராட்சி தலைவர் (பொ) மாதேஸ்வரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், பொதுக்குழு உறுப்பினர் அக்ரோநாகராஜ், மாவட்ட பிரதிநிதிகள் சுந்தராஜ், எல்லோராமணி, ஆர்.எஸ்.மணி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் மஞ்சுநாதப்பா, முன்னாள் நகராட்சி தலைவர் குருசாமி, கவுன்சிலர் குமார், சென்னத்தூர் பஞ்சாயத்து தலைவர் ராமாஞ்சிரெட்டி, கிளை செயலாளர் சரவணன், நாராயணப்பா, மேலவை பிரதிநிதி ஸ்ரீதர், ஒன்றிய முன்னாள் செயலாளர் அன்சர், நகர துணை செயலாளர் கஜேந்திரன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், ஒன்றிய துணை செயலாளர்கள் கருணாநிதி, முனிராமையா, மத்திகிரி சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
* ஓசூர் ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் பாலகிருஷ்ணரெட்டி தலைமையில் பேட்ரப்பள்ளி அண்ணாத்துரை சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். ஒன்றிய பொருளாளர் சிட்டிஜெகதீஷ், பாசறை மாட்ட செயலாளர் ராமு, ஒன்றிய ஜெ., பேரவை தலைவர் விஸ்வநாதரெட்டி, அரீஸ்ரெட்டி, நகர அவை தலைவர் உமாசங்கர், ஒன்றிய ஒட்டுனர் அணி செயலாளர் துரைராஜ், நகர நிர்வாகி சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்
* பஸ்தி அரசு துவக்கப்பள்ளியில் நகர நிர்வாகி சுப்பிரமணி மாணவர்களுக்கு கல்வி உபகரன்ஙகள், இலவச சீரூடைகள் வழங்கினார்.
* ஓசூர் நகர அ.தி.மு.க., செயலாளர் நாராயணன் தலைமையில் ராம்நகர் அண்ணாத்துரை சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். கவுன்சிலர்கள் தவமணி, சிவக்குமார், சரஸ்வதி, லோகநாதன், ஒட்டுனர் அணி நகர செயலாளர் ஜெ.ஜெ., நகர் ராமச்சந்திரன், வட்ட செயலாளர்கள் நட்ராஜன், உதயகுமார், ஈஸ்வரன், மணி, லட்சுமணன், வாழை முத்து, பாசறை மாவட்ட தலைவர் மாரேகவுடு, மத்திகிரி நகர செயலாளர் முத்துராஜ், சாக்கப்பா, நஞ்சேகவுடு, ஜெ.பேரவை வட்ட செயலாளர் லஜபதி, எம்.ஜி.ஆர்., மன்றம், ராதாகிருஷ்ணன், எம்.ஜி.கோபால், ராமச்சந்திரன், முன்னாள் கவுன்சிலர் அராப்ஜான், அப்துல் நசீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


